Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

கூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி


கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக இணைய தளமான கூகுள் பிளசில் தொடர்ந்து புதிய வசதிகளை புகுத்தி வருகின்றனர். இப்பொழுது கூகுள் நம்முடைய URL மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர்.
அதாவது நீங்கள் கூகுள் பிளசில் ஒரு கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கென ஒரு 21 இலக்க ஐடிஎண் கொடுத்து கூகுள் பிளஸ் URL அமைக்கப்படும். இதை ஞாபக வைத்து கொள்வது அரிது. ஆனால் பேஸ்புக் தலத்தில் இந்த எண்ணுக்கு பதிலாக நமக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளும் வசதி உள்ளது. 

இனி கூகுள் பிளசிலும் URL மாற்றி கொள்ளும் வசதி புகுத்தி உள்ளனர். உதாரணமாக 

https://plus.google.com/smdsafa
இது போன்று மாற்றி கொள்ளலாம். ஞாபகம் வைத்து கொள்வதும் எளிது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எளிதாக இருக்கும். இந்த வசதி இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

இந்த வசதி உங்களுக்கு தயாராகிய உடன் கூகுள் பிளசை திறந்தவுடன் மேல் பகுதியில் அதற்கான அறிவிப்பை காணலாம். அதில் உள்ள Change URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்து URL மாற்றி கொள்ளலாம். அல்லது உங்களின் ப்ரோபைல் பக்கத்தில் About பகுதிக்கு சென்று Google+ URL பகுதியில் Claim என்பதை அழுத்தி URL மாற்றி கொள்ளலாம்.

     

            

அல்லது இந்த லிங்கில்  Google+ Verificationசென்று அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் கூகுள் பிளசின் இந்த வசதியை பெறலாம். 

                    

இந்த வசதி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்கவும். 

Followers

Comments Please...