skip to main |
skip to sidebar
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை
- மஸ்ஜித் - பள்ளி,பள்ளிவாசல்-வணக்கத்தலம்
- தொழுகை-இறைவணக்கம்
- ஹஜ்ரத், உஸ்தாத்(உருது) - ஆசிரியர், பாடம் நடத்துபவர்.
- மௌலவி - கற்றறிந்தவர்
- இமாம் - பள்ளிவாசலில் தொழுகை நடத்துபவர்.
- மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.
- ஆலிம் - 7 ஆண்டு இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி. (ஆலிம் என்பதன் நேரடிப் பொருள் அறிஞர் என்பதாகும்)
- பாங்கு, அதான் - தொழுகைக்கு அழைத்தல்
- (திருக்) குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். இது 1450 ஆண்டுகளுக்கு முன் கடவுளால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது.
- ஹதீஸ் - முஹம்மது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள். புஹாரி சரீப்
- சுன்னத் - நபிவழி, முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அதன்படி நடத்தல்.
- சூட்டுகறி நோன்பு(சுட்ட கறி)--பக்ரீத் பண்டிகை(பழனி)
- ஜும்ஆ - வெள்ளிக்கிழமை பகல் ஊர்மக்கள் அனைவரும் ஒரிடத்தில்(பள்ளிவாசலில்) கூடி நின்று தொழுதல்
- முத்தவல்லி -- பள்ளிவாசலின் தலைமை நிர்வாகி
- குத்பா (பேச்சு வழக்கில் 'கொத்துவா') - மார்க்கப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ விலும் திருமணத்தின் பொழுதும் நிகழ்த்தப்படுதல்.
- ஈத் - பெருநாள், பண்டிகை, திருவிழா
- ஜும்ஆ, ஜும்மா - வெள்ளியன்று நடத்தப்படும் சிறப்பு வழிபாடு
[தொகு]உடை மற்றும் அலங்காரம்
- ஜிப்பா(jibba) - ஆண்கள் அணியும் வெள்ளைத் துணியிலான உடை.
- புர்கா, பர்தா(bardha) - பெண்கள் தங்களின் கண்ணியத்தை பேணுவதற்காக, பெண்மையை மறைப்பதற்காக அணியும் உடை. இவை அநேகமாய் கருப்பு நிறத்திலே இருக்கும்
- துப்பட்டி - உயர்தர வெள்ளைத் துணியிலான, பெண்கள் தங்களை மறைத்துக்கொள்வதற்கான உடை.
- சுர்மா - கண்திரைகளில் இடப்படும் ஒருவகை சுட்ட கல். இவை நபிவழி என்று நம்பப்படுகிறது.
- கைலி - தைக்கப்பட்ட லுங்கி
[தொகு]உணவு, பதார்த்தங்கள்
- கொலக்கட்டை - (கொழுக்கட்டை) ஒருவகை இனிப்பு பலகாரம், அரிசி மாவுடன் சிறுபறுப்பு, சக்கரை, சேர்த்து வேகவைத்து சாப்பிடுதல்
- வட்லப்பம் பழைய தஞ்சை மாவட்டங்களில்- முட்டை, சீனி, பால் போன்றவற்றை சேர்த்து நன்கு அடித்து பின் வேகவைத்து செய்யப்படும் விசேச பண்டம். இவை அநேகமாய் விருந்து, பண்டிகை நாட்களில் தயார் செய்கிறார்கள்.
- தேத்தண்ணி (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - தேநீர்
- தேக்சா -பிரியாணி செய்ய பயன்படும் பெரிய பாத்திரம்
- பணிக்கம் - எச்சில் துப்ப பயன்படும் பாத்திரம்
- புளியாணம் (பழைய தஞ்சை மாவட்டங்களில்) - (புளி) ரசம்
- ஆனம் - மீன் ஆனம் =மீன் குழம்பு
- தாளிச்சா - அநேகமாய் திருமண விருந்துகளில் இவை கொடுக்கப்படுகிறது. உருளைகிழங்குடன், கத்தரிக்காய், தக்காளி, மற்றும் பல காய்கறிகளுடன் ஆட்டு ஈரல் சேர்ந்து வைக்கப்படும் ருசிமிக்க குழம்பு.
- ஐந்து-கறி-சோறு - கத்தரிக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு(ஆட்டு ஈரலுடன்), இனிப்பு, ரசம் அத்துடன இறைச்சி் ஆகிய ஐந்து தனித்தனி வகைகளின் கலவையையே ஐந்து கறிசோறு என்று அழைக்கிறார்கள்,
- மாசி - காயவைக்கப்பட்ட ஒருவகை மீன், இதனை தூள் செய்து, அத்துடன் மிளகாய் பொடி சேர்த்து தூளாக்கி, வெங்காயம், எழுமிச்சை சேர்த்து ரசம்+சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவை பெரும்பாலும் நோன்புக்காலங்களில் பயன்படுத்துவார்கள். இவ்வகை உணவு மலேசியா, மாலத்தீவுகளிலிருந்து வருகிறது.
- சகன், ஸஹன் - நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம். பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டிணம், நாகூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் திருமண விருந்துகளில் இந்த முறையைப் பார்க்கலாம்.
- பீர்னீ (பரங்கிப்பேட்டை) - ரவை கஞ்சி (இனிப்பு)
[தொகு]நிறுவனங்கள்
- மதரஸா - இஸ்லாமிய கல்லூரி, இங்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள், குர்ஆன் மனனம் செய்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.
- எதீம் கானா - அநாதை இல்லம்.
- பைத்துல் மால் - பொது நிதியகம், பொதுமக்களிடம் ஜகாத், போன்றவற்றை, வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகிக்கும் ஸ்தாபனம். பார்க்க அதிரை பைத்துல்மால்
- ஜமாஅத் - கூட்டமைப்பு
- மஹல்லா - பகுதி
- மக்தப் - சிறுவர், சிறுமியருக்கு திருக்குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கப்படும் இடம்
[தொகு]விளிச்சொற்கள்
- சபூர் செய் - பொறுமை காத்திரு, பொறுமையாய் இரு, ஒருவர் துன்பத்திலிருக்கும் பொழுது, (ஆறுதலுக்காக) சொல்லப்படுவது.
- துஆ செய் (இலங்கைத் தமிழ்: துவா)- எனக்காக பிரார்த்தனை செய்
- நிய்யத் வை - (நல்லவற்றிற்காக, தூய எண்ணத்துடன்) உறுதி எடுத்துக்கொள்
[தொகு]பொதுவான சொற்கள்
- நfப்ஸ் - மன இச்சை, ஆசை. நப்ஸை கட்டுப்படுத்திக்கொள்- ஆசையை கட்டுப்படுத்திக்கொள்.
- பொஸ்Sப்p, நஸீBப் (பரங்கிப்பேட்டை)- கொடுப்பினை. அவனுக்கு பொஸ்ப் இருந்திருக்கிறது, இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு. (இந்த வார்த்தை எதிர்பாராதவிதமாக விருந்து ஏற்பாடு செய்து அப்பொழுது திடீரென நண்பர் ஒருவர் அங்குவரும் பொழுது அவரைப் பார்த்து சொல்லப்படுதல்)
- ஹக் - பங்கு, அவனுடைய ஹக்கை கொடுத்துவிடு (அவனுடைய பங்கை கொடுத்துவிடு),நம்பிக்கை(ஆண்டவன் மீது ஹக் இருக்கனும்)
- ராஹத் - ராஹத்தாய் இருக்கிறது(பழைய தஞ்சை மாவட்டங்களில்) - காற்றோட்டமாய் இருக்கிறது, இதமாக இருக்கிறது.
- மிஸ்கீன்,முசாபர் (அரபி) - வழிப்போக்கர், பிச்சை எடுப்பவர்.
- தீதார் - மரணமடைந்தவரை கடைசியாக பார்ப்பது
- கண்டுக்குட்டு வருதல் - இறந்தவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிக்குதல்
திருமணம்
- நிக்காஹ் - திருமணம், ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய, வாழ்வியல் ஒப்பந்தம்.
- வலிமா - திருமண விருந்து, மணமகன் அவரின் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு திருமணத்தை முன்னிட்டு கட்டாயம் அளிக்க வேண்டிய விருந்து.
- மஹர் - தங்கம் அல்லது பணமாக மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் திருமண அன்பளிப்பு. மணமுறிவு ஏற்படும் விடத்து இதனை மணமகன் திருப்பி கேட்க கூடாது என்று வழியுறுத்தப்படுகிறது, அது மலையளவாகினும் சரியே.
- தலாக் - விவாகரத்து, மணமுறிவு.
- கத்னா செய்தல், சுன்னத் கல்யாணம் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள அதிகப்படியான தோலை வெட்டுதல்.
- குலா - பெண் விரும்பி கேட்கும் விவாகவிடுதலை
[தொகு]சோகம், துக்கம்
- இன்னாலில்லாஹி (வ இன்னா இலைஹி ராஜிஊன்) - கடவுளிடமிருந்தே வந்தோம் அவனிடமே செல்ல இருக்கிறோம். ஒருவரின் இறந்த செய்தி அல்லது பொருட்கள் காணாமல் போகும் விடத்து இந்த வாக்கியம் சொல்லப்படுகிறது.
- ஜனாஸா, மய்யித்து - இறந்தவரது உடல்.
- வஃபாத் - வஃபாத்தாகிவிட்டார்கள், இறந்துவிட்டார்கள்
- கஃபன் - இறந்தவரது உடலை கட்ட பயன்படும் (வெள்ளைத்) துணி.
- கப்ர்(kabr) - இறந்தவர் புதைக்கப்பட்டிருக்கும் இடம்.
- கப்ருஸ்தான்,மையவாடி (அதிராம்பட்டிணம்), அடக்கஸ்தலம் - இறந்தவர்கள் புதைக்க உபயோகிக்கும் இடம்.
- சந்தாக்(santhak) - இறந்தவர்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் பாடை .