உலவிகளுக்கான போரில் கூகுள் குரோம் வெல்ல காரணம் அடிக்கடி வெளியிடப்படும் புதிய வசதிகள். இதற்க்கு முன் இணைய பக்கங்களை PDF பைல்களாக மாற்ற சில நீட்சிகள் மற்றும் இணையதளங்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் கூகுள் குரோம் பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF பைல்களாக தங்களுடைய கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம்
- முதலில் குரோம் உலவியில் நீங்கள் PDF பைலாக மாற்ற இருக்கும் இணைய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
- அடுத்து CTRL + P என்பதை ஒருசேர அழுத்துங்கள்.
- உங்களுக்கு Print Dialogue விண்டோ வந்திருக்கும் அதில் Destination பகுதியில் Save as PDF என்று இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் Change பட்டனை அழுத்தி Save as PDF வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
- இப்பொழுது மேலே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டியிருக்கும் Save பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த இணையப்பக்கம் PDF பைலாக உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.
குறிப்பு: பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் நேற்று நண்பர் ஒருவர் மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டதால் இந்த பதிவு.
மேலும் இணைய பக்கங்களை நேரடியாக கூகுள் டிரைவில் சேமிக்கும் முறையை கண்டறிய இந்தலிங்கில் செல்லுங்கள்.
Update : மேலே கூற மறந்து விட்டேன் இந்த வசதி குரோமின் புதிய பதிப்புகளில் (Latest version) மட்டுமே உள்ளது. பழைய பதிப்பை உபயோகித்து கொண்டிருந்தால் இந்த லிங்கில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
மற்றும் சுலபமாக அப்டேட் செய்வது பற்றி அறிய முந்தைய பதிவை கூகுள் குரோமின் புதிய வெர்சன் 20.0 , சுலபமாக அப்டேட் செய்வது எப்படி பார்க்கவும்.