"தற்போது (சில) சகோதரர்கள் தங்கள் மனைவியின் புகைப்படங்களை 'பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இணைத்துள்ளார்கள் சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா
அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை பார்ப்பது தான் இஸ்லாம் கூறுவதா? அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை எந்த கோணத்தில் பார்ப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா?‘‘
"பெண்கள் தங்களின் கணவன்மார்கள், தங்களின் தந்தையர்கள், தங்களுடைய கணவனுடைய தந்தைகள், தங்களின் குமாரர்கள், தங்களின் கணவன்மார்களின் குமாரர்கள், தங்களின் சகோதரர்கள், தங்களின் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களு(டன் தொடர்பு)டைய பெ...ண்கள், தங்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்) அல்லது பெண்களின் மீது ஆசையற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் அவயவங்களை அறிந்து கொள்ள முடியாத சிறு வயதுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர (மற்றெவருக்கும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரங்களைப் போன்ற) தங்களின் அலங்காரத்தைக் காட்ட வேண்டாம்.’ (அல்குர் ஆன் 24:31)
இதிலிருந்து அவர்கள் யார் யார் முன்னிலையில் தோன்றலாம், அவர்களின் அழகைப் பார்க்க யாருக்கு அனுமதி உண்டு என்பது மிகவும் தெளிவாகிறது.
இவர்களைத் தவிர பெண்களின் அலங்காரங்களை பார்க்க எவருக்கும் அனுமதி கிடையாது.