ஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள் ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time) அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.
ஒரு யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும்
100 வாட் என்றால் 10 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரம்.
எந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.
Fan 60WATTS,
Tube Light 40WATTS
Television 100 WATTS
ஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை
டி.வி 1 100 W 3 மணி நேரம் 300 வாட்ஸ்
ஃபேன் 1 60 W 12 மணி நேரம் 720 வாட்ஸ்
டியூப் லைட் 3 40 W 4 மணி நேரம் 480 வாட்ஸ்
மொத்தம் 1500 வாட்ஸ்
ஒரே நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான். அதன்படி பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100= 100வாட்ஸ்), பேன்(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ். ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.
நாள் ஒன்றுக்கு 1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.
சோலார் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான் மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும், பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.
நாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.
100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல் 1 உத்தேச விலை = ரூ.13,000
800 VA இன்வெர்ட்டர் 1 உத்தேச விலை = ரூ. 4000.
100 Ah பாட்டரி 2 = ரூ.12,000
சார்ஜ் ரெகுலேட்டர் = ரூ. 2000
இதர செலவுகள் = ரூ.7000
இது ஒரு நீண்ட கால் முதலீடு.
சோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.
பாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும்
அட்வாண்டேஜ் ,டிஸ் அட்வாண்டேஜ்
அட்வாண்டேஜ் :
1.கரண்ட் பில் கட்ட தேவையில்லை
2.தினந்தோறும் பராமரிக்க தேவை இல்லை
3.காற்று மாசுபடுவதில்லை
4.ஆட்டோமேடிக் சிஸ்டம் என்பதால் manual ஆக ஏதும் செய்ய வேண்டாம்
5.நீடிய உழைப்பு, பேனல்20 வருடங்கள் ,பேட்டரி 5 வருடங்கள்
6.புகை மற்றும் சத்தம் வருவதில்லை
டிஸ் அட்வாண்டேஜ் :
1.மழை காலம் ,மேக மூட்டம் சமயங்களில் சார்ஜ் ஏறுவது கடினம் ,
2.இட வசதி (மொட்டை மாடி இல்லாத வீடுகளுக்கு கடினம் தான் )
3.செலவு அதிகம்
விரைவில் :
உங்களுடைய தேவைக்கு ஏற்ப குறைந்த விலையில்
இன்வெர்ட்டர் மற்றும் சோலார் பேனல் அமைத்து தரப்படும். ( இன்ஷா அல்லாஹ்)