பிளாக் என்றால் என்ன?
நாம் நம்முடைய தினசரி டைரி எழுதுவது போன்றது இது. நாம் பார்ப்பது, படிப்பது என்று பகிர்வோம்.
வெப்சைட் என்றால் என்ன?
இது உங்கள் பயோ-டேட்டா போன்றது. என்ன பெயர்,என்ன படிப்பு. என்று சொல்வது. இதில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யார் என்று மட்டும் சொல்வது போன்றது.
பிளாக் vs வெப்சைட் என்ன வேறுபாடு?
மிக எளிது.மேலேயே தெரிந்து இருக்கும் இதற்கான பதில். நான் எளிதாக விளங்கும் வண்ணம் சொல்கிறேன்.
பிளாக் | வெப்சைட் |
பிளாக் என்பதன் முகப்பில் அதனுடைய சமீபத்திய பதிவுகள் இருக்கும், இது அடிக்கடி Update செய்யப்படும் | வெப்சைட் என்பதில்அந்ததளம் எது பற்றியது என்ற தகவல் இருக்கும். பெரும்பாலும் இந்த தகவல்கள்அடிக்கடி மாறாது. |
இணையம் பற்றி அடிப்படை தெரிந்த எவரும் எழுதலாம் | கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு தேவை. கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் |
HTML பற்றிய கவலை தேவை இல்லை. நீங்கள் எழுத வேண்டும் அதுவே முக்கியம் | எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை இல்லை.வடிவமைப்புதான் முக்கியம். எனவே கொஞ்சம் HTML பற்றிய அறிவு அவசியம் |
இது தேதி வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த மாதத்தில் இத்தனை என்று கணக்கில் கொள்ளலாம். | இதில் static Pages எனப்படும் பக்க அமைப்பு இருக்கும். இதன் மூலம் தளத்தின் பக்கங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். உதாரணம்: Home, About Us, Contact Us, Products, இன்னும் பல. |
நீங்கள் கேட்கலாம் ஒரு வலைப்பூ என்பது வெப்சைட்க்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதே என்று. ஆனால் இதில் எல்லாமே ஒரு வரையறைக்கு உட்பட்டு தான் இருக்கும்.
ஒரு website ஆனது ஒரு பிளாக் ஆக கூட செயல்பட முடியும். ஆனால் ஒரு பிளாக் வெப்சைட் என்ற பெயரை, அமைப்பைக் கொண்டு இருக்கலாம், ஆனால் வெப்சைட் ஆகி விட முடியாது. இதுதான் மிக முக்கிய வேறுபாடு. அதைத்தான் மேலே ஒற்றை வரியில் சொல்லி இருந்தேன்.
blogger என்பது மிக மிக எளிதான பிளாக் வசதி இதை விட மேம்பட்ட வசதிகள் பல உள்ளன. Wordpress, webs, Typepad, இன்னும் பல.
என்னைக் கேட்டால் தனிமனிதர் ஒருவர் வெப்சைட் என்பது வைத்திருக்க என்ற அவசியம் இல்லை. அது நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு மட்டும் உகந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு website கண்டிப்பாக பிளாக் என்பதை கொண்டிருத்தல் வேண்டும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,
நான் ஒரு தொண்டு நிறுவனம் வைத்து உள்ளேன்என்றால், அது எதைப் பற்றியது, எங்கெங்கு உள்ளது, நோக்கம் என்ன? சாதித்தது என்ன? படிக்கும் நீங்கள் பங்கெடுப்பது எப்படி என்று என் வெப்சைட் மூலம் பகிர வேண்டும்.
அதே வெப்சைட்க்கு நான் ஒரு தனி பிளாக் என்று ஒன்று வைத்து நான் செய்த பணிகளை பட்டியலிட வேண்டும். என்னென்ன event நடத்தி உள்ளேன், யார் வந்தனர்,யார் பயன்பெற்றனர், இன்னும் பல.
இப்போது தெளிவாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய பார்வை. உங்கள் பார்வை வேறு மாதிரியாய் இருக்கலாம். அதையும் பகிருங்கள். ஏன் என்றால் நான் கற்றது கையளவு மட்டுமே.
வெப்சைட்டில் ப்ளாக்
ஒரு வெப்சைட்க்கு ப்ளாக் என்பது சப்-டொமைன் ஆகவோ அல்லது, ஒரு பேஜ் ஆகவோ இருக்கும். உதாரணம்,
Sub-domain blog- http://poems.smdsafa.net/
Blog Within The Domain- http://kavithaigal-ulagam.blogspot.in/