ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை.
இதற்கு என்னதான் சிகிச்சை?
சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது என்று