Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

கூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில் இணைந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கிறது. அந்த புதிய வசதிகள் என்ன என்பதையும் Gmail Field trial சேவையை எப்படி உங்கள் கூகுள் கணக்கில் ஆக்டிவேட் செய்வது என்றும் கீழே காணலாம்.

புதிய வசதிகள்:

ஜிமெயில் சர்ச் பாரில் ஏதேனும் தேடும் பொழுது முடிவுகள் ஜிமெயில் தளத்தில் மட்டுமின்றி Google Drive, Google Plus மற்றும் Google Calender போன்ற மற்ற தளங்களில் இருந்தும் காட்டும்
. உதாரணமாக நான் ஜிமெயில் சர்ச்சில் thi என்று கொடுத்தால் வந்திருக்கும் முடிவை பாருங்கள்.



இதே போன்று கூகுள் தேடியந்திரத்தில் ஏதேனும் தேடும் பொழுது அதற்கு சம்பந்தமான முடிவுகளை உங்கள் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் கணக்கில் இருந்தால் அதனையும் காட்டுகிறது. இந்த வசதி www.google.com ஆங்கிலத்தில் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே. 


இதனால் ஜிமெயில், டிரைவ் என ஒவ்வொரு இடமாக தேடி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை அனைத்து தளத்திலும் ஒரே இடத்தில் இருந்து தேடி கொள்ளலாம்.

Search field trial ஆக்டிவேட் செய்ய:
இந்த புதிய வசதிகளை பெற உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து பிறகு இந்த லிங்கில் Gmail Field Trail சென்று அங்கு உள்ள Join the field trail என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


அந்த பட்டனை அழுத்தியவுடன உங்களின் கோரிக்கை அவர்களுக்கு சென்று விடும். பிறகு ஓரிரு நாள் காத்திருக்கவும் (எனக்கு பதில் வர இரண்டு நாள் ஆனது).  புதிய வசதிகள பெற உங்கள் கணக்கு தயாரானவுடன் மெயில் அனுப்புவார்கள்.  அப்பொழுதிலிருந்து இந்த வசதிகளை உபயோகித்து கொள்ளலாம். 

இந்த வசதிகள் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

Followers

Comments Please...