பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 80 லட்சமாக இருந்தது என, "பேஸ்புக்' இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரித்திகா ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உலக அளவில், இணையதளம் பயன்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், அலைபேசி, கம்ப்யூட்டர், லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பர சந்தை ஆண்டுக்கு, 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இந்தியாவில், "பேஸ்புக்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 5 கோடி என்ற அளவில் இருந்தது.
தற்போது, இந்த எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு கிரித்திகா கூறினார்.