விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை விரைவில் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான வடிவில் டவுன்லோட் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து அதை bootable பைலாக கன்வர்ட் பண்ணி தான் உபயோகிக்க முடியும்.
டவுன்லோட் செய்ய:
Windows 8 Release Preview in .exe format -
Download
Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 3.3 GB -
Download
Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 2.5 GB -
DownloadProduct Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF