இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும்.
- அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
- அல்லாஹ் - (ஒரிறைக்) கடவுள்,
- முஹம்மது (இலங்கைத் தமிழ்: முஹம்மது) - முஹம்மது நபி, இறைத்தூதர், இஸ்லாமியர்கள் முஹம்மது நபி அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக தங்கள் பெயருக்கு முன் "முஹம்மது" என்று சேர்த்துக்கொள்வர். உதா. முஹம்மது சலீம்.
- யா-அல்லாஹ் - கடவுளே, பிரார்த்தனையின் போது, துயரத்தின்போது விளிக்கப்படும் வார்த்தை.
- பிஸ்மில்லாஹ் - கடவுளின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்), இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை செய்யும் பொழுது சொல்லப்படும்.
- பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய கடவுளின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
- இன்ஷா அல்லாஹ் - கடவுள் நாடினால் (நடக்கும்)
- அல்ஹம்துலில்லாஹ் - கடவுளுக்கு நன்றி.
- ஜகாத் - ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான (அரசாங்க) வரி. அரசு வசூலிக்கவில்லையெனின் கடமையானோர் தாமாகவே இவ்வரி பெறத்தக்கவர்க்கு வழங்குதல் முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
- ஷைத்தான் - தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்
- மாஷா அல்லாஹ் - மனம் திருப்தியாகும்போது
- ஸுப்ஹானல்லாஹ் - ஆச்சரியப்படும்போது