ஒவ்வொரு இணைய பக்கங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக மற்ற பதிவுகளின் லிங்க் கொடுத்து இருப்பர். மவுஸின் மூலம் அந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பதிவிற்கு அல்லது மற்ற இணையதளங்களுக்கு செல்ல முடியும். இது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இங்கு நாம் பார்க்க இருப்பது அந்த மவுசை தொடாமலே குறிப்பிட்ட லிங்கை எப்படி கிளிக் செய்வது என்று பார்க்கலாம். கேட்பதற்கே சுவாரஸ்யமா இருக்குல்ல வழிமுறையை அறிய கீழே தொடருங்கள்.
கூகுள் குரோம் பயனர்கள்:
குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் இந்த Dead Mouse நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் ஆகியதும் குரோம் உலவியை reload செய்யுங்கள். பிறகு ஏதேனும் இணைய பக்கத்தை திறந்து அந்த பக்கத்தில் உள்ள லிங்கில் முதல் எழுத்துக்களை டைப் செய்யுங்கள். டைப் செய்ததும் அந்த எழுத்தில் உள்ள லிங்க் மேலும் கீழும் அசைவதை காணுங்கள்.
உதாரணமாக bbc news என்று லிங்க் கொடுத்து இருந்தால் நீங்கள் bbc என்று டைப் செய்தால் போதும். அந்த லிங்க் மேலும் கீழும் அசையும். உங்கள் கீபோர்டில் Enter அழுத்தினால் அந்த லிங்க் திறக்கும். புதிய டேபில் திறக்க Shift + Enter கொடுக்கவும்.
ஒரே பெயரில் நிறைய லிங்க் இருந்தால் Tab அழுத்தி சரியான லிங்கை தேர்வு Enter கொடுக்கவும்.
பயர்பாக்ஸ் பயனர்கள்:
இந்த வழிகளில் மவுசை தொடாமல் இணைய பக்கங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு இது மிகவும் சுலபம் இதற்காக எந்த நீட்சியையும் உபயோகிக்க தேவையில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை திறந்து ஏதேனும் இணைய பக்கத்தை ஓபன் செய்து "/" slash கீயை அழுத்தி பிறகு அந்த லிங்க் எழுத்தை அழுத்தினால் அந்த லிங்க் highlight ஆகும். பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் ஓபன் ஆகும்.
உதாரணமாக world cup என்று ஒரு லிங்க் இருக்கிறது என வைத்து கொள்வோம். / அழுத்தினால் ஒரு சிறிய விண்டோ வரும் அதில் wor என்று டைப் செய்தால் போதும் அந்த லிங்க் ஹைலைட் ஆகும் பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் திறந்து விடும்.
இந்த வழிகளில் மவுசை தொடாமல் இணைய பக்கங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.