என் உள்ளம் துடிக்குதடி
உன் வரவை எதிர்பார்த்து
நலம் அறிய ஆவல்தான்
நலமின்றி கண்ணீர்
வடிக்கிறேன் என்
பிரிவின் வலியால்
எப்படி இருந்திருப்பாய்?
சின்னச்சிறு நான் செய்யும்
குறும்புகளை ரசித்து சிரித்து ஊரார்களிடம் என் மகன்
விளையாட்டை பாறேன்று சொல்லி மகிழ்வாயே!
எட்டுமாதத்தில்
எட்டிவைத்து நடப்பதற்கு எண்ணூறு கோயில்களைச்
சுற்றி நான் நடக்க நீ
நடைப்பயணம்
மேற்க்கொள்வாயே!
விளையாட்டு பொம்மைக்காக
அடம்பிடிப்பேன்
கடைக்காரனிடம்
அடம்பிடித்து என்
கண்ணீரைத்
துடைப்பாயே!
எதிர் வீட்டு
அண்ணனோ,அக்காவோ தூக்கிச்
சென்று அழகென்றால்
கண்பட்டு போமென்று என்
கருமை வைப்பாய்!
சின்னச்சிறு வலியால்
துடித்தால்
இறைவனிடம் வாதம்
செய்வாய் நான்
குணமாக வேண்டி
அம்மா இத்தனையும்
எனக்காய்
செய்துவிட்டு
வேலைக்காக
வெளியூர் செல்ல
அனுப்புவது ஞாயமா?
உன் நினைவில்
காயுதடி என் கண்கள்!
கண்ணீரில் இந்த கடிதம்
அம்மா மனம்
உடைந்து கண்ணீர்
வடிக்காதே!
ஒரு கனம் பிரிந்தாலும்
மறுகனம்
உன்னை அடைவேன்
எதிர்பார்த்துக்
காத்திரு
வந்துவிடுகிறேன்
நம்
உறவு மறுபிறவியிலும்
நீடிக்கட்டும்.......!!!
அன்புடன் உன் மகன்"