Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்
இன்று மாரடைப்பு, அரிய மனித உயிர்களைப் பறித்துவருவதை கண் முன்னால் காண்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணிகள். 

அதாவது, இயற்கையாகவே அமைந்த காரணிகள். இவற்றை நாம் மாற்ற முடியாது. உதாரணமாக, ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.

கண்களைத் தாக்கும் நோய்களும்.. பாதுகாக்கும் வழிகளும்

மனித உடலில் அமைந்திருக்கும் உறுப்புகளில் மிகவும் மென்மையானவை, முக்கியமானவை கண்கள். உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் கண்கள் அழுவதுபோல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களும் கண்களை பாதிக்கவே செய்கின்றன. அதனால் கண்களை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும்- பராமரிக்கவும் வேண்டும். 

பொதுவாக கண்களில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? பல்வேறு விதமான சூழ்நிலைகளில், பல்வேறு விதமான நோய்கள் கண்களில் ஏற்படுகின்றன. கண்கள் திறக்கும்போது சாதாரணமாக தூசு விழுந்துவிடும். அதனால் அலர்ஜி ஏற்பட்டால் அதுகூட ஒரு நோயாக மாறிவிடும். 

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்!


நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்!நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.   கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

உலர் திராட்சையின் பலன்கள்


சத்துப்பட்டியல்: உலர் திராட்சை
திராட்சைகளை பதப்படுத்தி உலர வைத்து தயாரிக்கப்படும் உலர் திராட்சைகள், கூடுதல் சத்துக்களை பெறுகின்றன. அதிக ஆற்றல் தரக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் மாறிவிடுகிறது. அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்..

சாதாரண திராட்சைகள் அதிக அளவில் நீர்ச்சத்து கொண்டது. அதனை 16 சதவீதம் மட்டும் திரவம் இருக்கும் வகையில் உலர்த்தப்பட்டு உலர் திராட்சைகள் தயாரிக்கப்படுகின்றன. 6 விதங்களில் இதனை பதப்படுத்தி உலர்த்துகிறார்கள். திராட்சை ரசம் (ஒயின்) சேர்த்து உலர்த்தப்படும் முறையும் உண்டு.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை

Followers

Comments Please...