மனிதகுலம் முன்னேறுவதற்கும், பல்வேறு தகவல்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவில் போய்ச் சேரவும்தான் சமூக வலைத்தளங்கள் தோன்றின.
கூகுள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் வரிசையில் தற்போது, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் அதிகளவில் நண்பர்களை இணைப்பதில் “வாட்ஸ் அப்“ முன்னணியில் இருக்கிறது.
வாட்ஸ் அப்பின் திடீர் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்துபோன ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது தெரிந்த தகவல். ஆனால், பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், வழக்கம் போலப் பெண்களை அச்சுறுத்தும் காரியங்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.