Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

BMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி

நமது கணினியில் பல்வேறு விதமான ஐகான்கள் உள்ளன, அவற்றை கொண்டு நாம் நம்முடைய கணிப்பொறியை அழகு செய்ய முடியும். நாம் நம்முடைய டாக்குமெண்ட் போல்டருக்கு தனித்தனியே உரையினை இடுவோம். அவ்வாறு நமக்கு வேண்டிய உரைகளின் அடையாளம் அல்லது முழுஉரையினை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். 



இவ்வாறு நமக்கு வேண்டிய ஐகான்கள் எளிதில் கிடைக்காது. அதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு வேண்டிய ஐகானை நாமே உருவாக்கி கொள்ள முடியும். இதற்கென இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருட்கள் கிடைக்கிறன ஆனால் அவைகள் சிறப்பானதாக இருக்காது. மேலும் சில மென்பொருட்களால் நம்முடைய கணிப்பொறியே செயல் இழக்க நேரிடும். இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க நாம் மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். அல்லது மென்பொருளுக்கு லைசன்ஸ் உரிமை இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இணையத்தில் ஒரு அருமையான மென்பொருள் கிடைக்கிறது. அந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொண்டு உங்களுக்கு வேண்டிய ஐகானை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி

இந்த மென்பொருளின் மூலமாக .bmp படங்களை ஐகானாக உருவாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான படத்தினை ஐகானாக உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் உருவாக்க நினைக்கும் ஐகானானது .bmp பைலாக இருக்க வேண்டும்.

Followers

Comments Please...