Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ஒன் சைடு லவ்! இளம் பெண்கள் உஷார்!

காதல் தோல்வியைச் சந்திக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை மீதும் காதல் மீதும் ஏற்படும் வெறுப்பை முன்பெல்லாம் தேவதாஸ் போல் தாடி வளர்த்தும்… தண்ணியடித்தும் வெளிப்படுத்துவார்கள். தங்களைக் கண்ணீர்க் காவியமாய் ஆக்கிக்கொள்வார்கள். அதோடு ‘”எங்கிருந்தாலும் வாழ்க’ என தங்கள் மானசீகக் காதலியை அந்த நேரத்திலும் வாழ்த்துவார்கள்.


ஆனால் இப்போது காலம் ரொம்பவே மாறிவிட்டது. தற்போது காதல் தோல்வியைச் சந்திக்கிற இளைஞர்கள் காதல் மீதான வெறுப்பை எப்படி வெளிப்படுத்து கிறார்கள் தெரி யுமா?

குபேந்திரன் என்ற இளைஞர் சொல்கிறார் கேளுங்கள்… “”"எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு, ஒரு பையனைக் காதலிச்சா. அவன் பல பெண்களோட சுத்திக்கிட்டு இருந்தது தெரிஞ்சதும்… இவன் நல்லவன் இல்லைன்னு அவன் நட்பை கட் பண்ணிட்டா. ஆனா… அந்தக் காதலன் என்ன செஞ்சான் தெரியுமா? தன்னோடு பீச்சிலும் பார்க்கிலும் அவ எடுத்துக்கிட்ட ஃபோட்டோக் களை.. கொஞ்சம் செக்ஸுவலா மார்பிங் பண்ணி… அதை நெட்ல போட்டு அவளை கால்கேர்ளா சித்தரிச்சிட்டான். அப்புறம் இது பத்திக் கேள்விப்பட்டு அந்தப் பொண்ணு தற்கொலை முயற்சிவரை போக… அவளை சமாதானப்படுத் திட்டு… அவனை இழுத்துட்டுப் போய் போலீஸ்ல ஒப்படைச்சோம். அவங்க முயற்சி எடுத்து நெட்ல இருந்த அந்தப் படத்தை நீக்கினாங்க. காதல்ல தோல்வி வந்தா காதலிச்ச பொண்ணைக் கேவலப்படுத்தணும்… அசிங்கப்படுத்தணுங்கிற… வக்கிர எண்ணம் இப்ப பலருக்கும் இருக்கு. அதனால் காதல்ல விழும் பெண்கள் கொஞ் சம் உஷாரா இருக்கணும். இல்லைன்னா… இப்படி அவமானப்பட வேண்டியிருக்கும்”’என்றார் வருத்தமாய்.

                                
“என் பெயரைப் போட்றாதீங்க’ என்ற வேண்டுகோளோடு பேசிய அந்த கல்லூரி மாணவி “”"என் அண்ணனோட பிரண்டு ஒருத்தன் எங்கிட்ட நல்லா பழகுவான். ஒருநாள் ஐ லவ் யூன்னு சொன்னான். நான் இதை ஏத்துக்கலை. “உன் அண்ணன்கிட்ட நான் நட்பு வச்சிக்கிட்டதே உனக்காகத்தான்’னு டயலாக்கெல் லாம் அடிச்சான். அவனோட பேச்சும் பிஹேவியரும் எனக்கு வெறுப்பை ஏற்படுத்துச்சி. “இனி எங்க வீட்டுக்கு வராதே… வந்தா… போலீஸ்வரைக்கும் போவேன்’னு சொன்னேன். அதோட வர்றதை நிறுத்திக்கிட் டான். ஆனா அந்தப் பய எங்க வீட்டுக்கு வந்துபோனப்ப… எங்க பேமிலி ஆல்பத்தில் இருந்து என் படத்தை எப்படியோ எடுத் திருக்கான் போல. அதை ஒரு இணையதளத்தில் போட்டு… என் பேர் அனாமிகா. வேலூர்ல இருக்கேன். கல்லூரியில் படிக்கும் என்னை யார் வேணும் னாலும் சந்திக்கலாம். ஒரு மணிநேரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய். ஒரு இரவு முழுதும் என்னோடு கழிக்க 6 ஆயிரம் ரூபாய்னு நானே அழைப்பு விடுக்கிறமாதிரி என் செல் நம்பரையும் கொடுத்துட்டான். அதிலிருந்து இரவு பகலா எனக்கு நிறையப் போன்கள். கேவலமான அழைப்புகள். வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. அப்புறம் எங்க பேமிலி நண்பர் ஒருத்தர் முயற்சியெடுத்து அந்த அசிங்க விளம்பரத்தை இணையதளத்தில் இருந்து நீக்கினார். போலீஸுக்குப் போனா குடும்பத்தின் பேர் கெட்டுடும்னு போகலை. பொதுவா வயசுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருக்கும் போது… அந்நிய ஆண்களை வீட்டுக்குள் பழக அனுமதிக்கக் கூடாதுங்கிறதுதான் இதில் இருந்து எங்க குடும்பம் கத்துக்கிட்ட பாடம்”’என்கிறார் ஆதங்கமாய்.

திருவண்ணாமலைக்காரரான சுதாகர் நம்மிடம் ஒரு வெப் தளத்தை காட்டினார். அதில் ஒரு பெண்ணின் படம் கிளாமராய் பதியப்பட்டு… “என் பெயர் வைசாலி. சென்னையில் எம்.பி.ஏ. படிக்கிறேன். எனக்கு ரேட் ஒரு மணி நேரத்துக்கு 8 ஆயிரம் ரூபாய். வீக் எண்ட் ஒன்லி. முதல்ல மெயில்ல உங்களைப் பத்தின விபரங்களை எனக்கு அனுப்பிட்டு… டைம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. இதோ என் செல் நம்பர்’னு விபரமாக எழுதப்பட்டிருந்தது.

இதேபோல் ஸ்மிதா என்ற 22 வயதுப் பெண்… தான் எம்.சி.ஏ. படிப்பதாகவும் மாலை 6 மணி முதல் இரவு 1 மணிவரைதான் ஃபிரீ என்றும் சொல்வதாக படத்துடன் விளம்பரம் இருந்தது.

“”இதெல்லாமே அந்தப் பெண்களுக்குத் தெரியாம எவனெவனோ பதிஞ்ச கீழ்த்தரமான பதிவு. முதல்ல நான் காட்டிய வைசாலிங்கிற பெண்… என் நண்பனோட தங்கை. இந்த விளம்பரத்தை பார்த்துட்டு… வர்றியா? எப்ப சந்திக்கலாம்னு? டே நைட் பாக்காம சதா போன். கடைசியாத்தான் தெரிஞ்சிது… அவளை ஒன்சைடா காதலிச்ச ஒருத்தன்… தன் காதலை தெரிவிக்காமலே… தன் ஆசை நிறைவேறாதுன்னு தெரிஞ்சிக் கிட்டு… அவள் ஃபோட்டோவை எங்கிருந்தோ எடுத்து… இப்படி நெட்ல கேவலமா கால் கேர்ளா சித்தரிச்சிருக்கான். அவனை பிடிச்சிட்டு வந்து செமையா கவனிச்சோம். வேற என்ன பண்றது?”’-சுதாகரின் குரலில் எரிச்சல் வழிகிறது.

இது போன்ற குற்றங்களைக் குறைப்பது எப்படி? என வழக்கறிஞர் ரமேஷ் கிறிஸ்டியிடம் நாம் கேட்டபோது “”வெப்சைட் ஒன்றில் ஆண் நண்பர் தேவை என்ற விளம்பரத்தில் இருந்த ஒரு நம்பருக்குப் போன் பண்ணினப்ப.. யார்றா நீ? போனை வைடான்னு ஒரு பெண் காச்மூச்சுன்னு கத்தினாங்க. அப்புறம் நான் யாருங்கிறதையும், வெப்சைட்டில் அவங்க செல்போன் நம்பர் இருப்பது குறித்தும் தெரிவிச்சேன். அதுக்கப் புறம்தான்… தான் சேலத்தில் ஒரு கல்லூரியில் படிக்கிறதாவும் தினம் 10 பேராவது போன்ல வந்து அசிங்கமா பேசறதாவும் சொல்லி அழுதாங்க.. உடனே நம்பரை மாத்திடுங்கன்னு சொன்னேன். காதலிச்ச பொண்ணுங்களையும் காதலிக்க மறுக்கும் பொண்ணுங்களையும்… அவங்கக்கூட பிரச்சினை வரும்போது இப்படி இணையதளங்கள்ல அசிங்கமா சித்தரிக்கும் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டு இருக்கு. போலீஸுக்குப் பாதிக்கப்பட்டவங்க போனா முறைப்படி புகார் கொடுங்கன்னு கேட்கிறாங்க. முறைப்படி புகார் கொடுத்தா மறுநாள் தினசரிகள்ல அந்த விவகாரத்தை எழுதி.. மேலும் பாதிக்கப்பட்டவங்களை அசிங்கப்படுத்தறாங்க. இதையெல்லாம் யோசிச்சி… இணையதள குற்றங் களுக்கு தண்டனைகளை அரசு அதிகமாக்கணும். இணையதளம்ங் கிற நவீன டெக்னாலஜியை மோச மான விசயங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதேபோல் பெண்கள் எல்லா விசயத்திலும்… எல்லா இடங்களிலும்… எல்லா மனிதர் களிடமும்… உஷாரா இருக்கணும். இது எல்லாவற்றையும்விட முக் கியம்” என்கிறார் அக்கறையாய்.

Followers

Comments Please...