Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்


தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே தலைகீழாய் கூட இருக்கும்.
  1. வாப்பா - கடற்கரை பகுதிகளான காயல்பட்டினம் கீழக்கரைபரங்கிப்பேட்டைஅதிராம்பட்டினம்,  தொண்டிஇராமநாதபுரம்,  காரைக்கால்,  நாகூர்  (தமிழ் நாடு) போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள். மரைக்காயர்களாய் இருப்பார்கள். அதேபோல், தந்தையை அழைக்க *அத்தா* பாப்பு, பாவா என்கிற வார்த்தைகளைஇராவுத்தர்கள் உபயோகப்படுத்த பார்க்கலாம் வாவா என்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில்அழைக்கிறார்கள்.
  2. உம்மா - அம்மா காயல்பட்டினம் அழைக்கிறார்கள்.
  3. உம்மம்மா, பெரியம்மா, அம்மம்மா, சேத்தா - அம்மாவுடைய அம்மா, பெரியம்மா என்று காயல்பட்டினம்,அதிராம்பட்டிணத்தில் அழைக்கிறார்கள், உம்மம்மா, சேத்தா என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்.
  4. லாத்தா,ராத்தம்மா,லாத்தம்மா,பெத்தம்மா(கோயம்பத்தூர்,திண்டுக்கல்,ஈரோடு மாவட்டங்கள்)- அம்மாவின் பெரிய சகோதரி, பெரியம்மா என்று சில ஊர்களில் அழைக்கிறார்கள், பியாமா, பெரிமா என்று காயல்பட்டினம்,பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்.
  5. சாச்சி காயல்பட்டினம்,(அதிராம்பட்டிணம்)காலாமா(கோயம்பத்தூர்,திண்டுக்கல்,ஈரோடு மாவட்டங்கள்) - அம்மாவின் தங்கை, சித்தப்பாவின் மனைவி. சின்மா, சின்னம்மா என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்
  6. ராத்தா, லாத்தா - அக்கா, காயல்பட்டினம்,அதிராம்பட்டிணம், நாகூர் (தமிழ் நாடு), போன்ற ஊர்களில் ராத்தா என்றும், காரைக்கால்,உடன்குடி, பொறையாறு போன்ற ஊர்களில் லாத்தா என்றும், பரங்கிப்பேட்டையில், பழைய தஞ்சை மாவட்டங்களில் ஆச்சி, ஆச்சா, ஆப்பா, ராத்தா, பூ (Boo), பூவா என்றும் அழைக்கிறார்கள்.
  7. காக்கா, நானா காயல்பட்டினம்(இலங்கைத் தமிழ்: நாணா) - அண்ணன், உடன்குடி, நாகூர் (தமிழ் நாடு),கீழக்கரைகாயல்பட்டிணம், மற்றும் பரங்கிப்பேட்டைஅதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும், நானா என்று காரைக்கால், போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள். நானா, பாய் (Bhai)என்று பரங்கிப்பேட்டையில் அழைக்கிறார்கள்
  8. சாச்சப்பா,சாச்சா, சச்சா,சின்னத்தா, சின்னவாப்பா- தந்தையின் சிறிய சகோதரர். சித்தப்பா, அம்மாவின் தங்கையின் கணவர் காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்.
  9. பெரியவாப்பா, பெரியப்பா,பெருத்தா,பெரியத்தா - தந்தையின் பெரிய சகோதரர், அம்மாவின் அக்கா கணவர்.காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்.
  10. வாப்பி(பு)ச்சா,வாப்புமா, அத்தம்மா, சேத்தா - தந்தையின் தாய்(அதிராம்பட்டிணம், நாகூர் (தமிழ் நாடு),உடன்குடிபரங்கிப்பேட்டை)காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்
  11. அப்பா - தாத்தா, அம்மாவின் தந்தை, அப்பாவின் தந்தை (அதிராம்பட்டிணம்,பரங்கிப்பேட்டை) இருவரையுமே இப்படித்தான் அழைக்கிறார்கள்.
  12. ராதா,ராதத்தா, அத்தத்தா, கண்ணுவாப்பா, தாதா - தந்தையின் தந்தை (தென்காசி),பழனிபரங்கிப்பேட்டைபழைய தஞ்சை மாவட்டங்களில்
  13. ராதி,ராதிமா, தாதி, தாதிமா - தந்தையின் தாய் (தென்காசி),பழனிபரங்கிப்பேட்டை
  14. நானா, நன்னத்தா- அம்மாவின் அப்பா (தென்காசி),பழனி, அண்ணன்(காரைக்கால்), பரங்கிப்பேட்டை
  15. நானி(நி?), நன்னீமா, நானிமா - அம்மாவின் அம்மா(தென்காசி),பழனிபரங்கிப்பேட்டை
  16. பெரிய வாவா - தந்தையின் மூத்த சகோதரர்
  17. சிறிய வாவா - தந்தையின் சிறிய சகோதரர்.
  18. மம்மானீ, மொம்மானீ - மாமாவின் மனைவி (பழனிபரங்கிப்பேட்டை)
  19. மாமி(பழைய தஞ்சை மாவட்டங்களில்), குப்பி(தென்காசி), புப்பு - தந்தையின் சகோதரி பரங்கிப்பேட்டை
  20. காளா - அம்மாவின் சகோதரி (தென்காசி, பரங்கிப்பேட்டை)பழைய தஞ்சை மாவட்டங்களில்
  21. மச்சி(பழைய தஞ்சை மாவட்டங்களில் ), மைனி (பரங்கிப்பேட்டை), மண்ணி(பள்ளப்பட்டி) - அண்ணனின் மனைவி ,
  22. மச்சிபழைய தஞ்சை மாவட்டங்களில் - தாயின் சகோதரனின் மகள், தந்தையின் சகோதரியின் மகள் மற்றும் நாத்தனார்,
  23. மச்சான் பழைய தஞ்சை மாவட்டங்களில் , - தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின் மகன் மற்றும் கொழுந்தனார்
  24. குடியானவன் - இந்து மக்கள் (பழனி)
  25. நாசுவன்(அதிராம்பட்டிணம்), அம்பட்டையன் (பரங்கிப்பேட்டை)- நாவிதர், சிகை அலங்காரம் செய்பவர்

Followers

Comments Please...