Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு


சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் . எனவே பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளில் அக்கறை செலுத்துவது நன்று .

வெயில் காலத்தில் , ஈர தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள்
மிகவேகமாக வளரும் எனவே , காய் கறி நறுக்கிய கத்திகள், பழம், சமைக்கும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் சுத்தம்செய்து பயன்படுத்த வேண்டும்.


வேர்க்குருவை தவிர்ப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதும், விளையாடிய பிறகு கால் , கைகளை நன்கு சோப்புபோட்டு கழுவுவதும் உடல் தூய்மையை அதிகரித்து நோய்தாக்கத்தை குறைக்கிறது.

வெளியில் செல்லும் போதோ (அ) விளையாடும் போதோ தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களை பாதுகாக்க, கண்கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியசெய்வதும் அவசியம்.

வெயில்காலங்களில் குறிப்பாக, ஆண் பிள்ளைகளுக்கு சிறுநீர் கடுப்பு நோய் உருவாக வாய்ப்புண்டு. காரணம் விளையாட்டு குஷியில் சிறு நீர் கழிக்க கூட மறந்து விடுவார்கள். எனவே , அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்கவேண்டியது பெற்றோரின் கடமையாகும் .

வெளியில் செல்லும்போது, சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சிலகடைகளை தவிர்த்து, எளிய எலுமிச்சைசாறு பானத்தை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச்செல்வது நல்லது. மாற்றி மாற்றி தண்ணீரை குடிப்பதால் உருவாகும் தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.

வெயில்காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைகளுக்கும் முக்கியத்துவம் தந்து, அரிப்பை ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்ச கூடிய பருத்தி ஆடைகளை அணியலாம்.

Followers

Comments Please...