ஹிந்துஸ்தானி இசை அறிஞர் பீம்சென் ஜோஷி காலமானார்!
பாரத ரத்னா விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசை அறிஞர் பீம்சென் ஜோஷி காலமானார்.
பத்ம விருதுகள் அறிவிப்பு!
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜிம் பிரேம்ஜி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா, தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ், தேச பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு இந்திய அரசின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷண் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச்!
ஒரிசா இனி ஒடிசா: பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்!
ஒரிசா மாநிலத்தை ஒடிசா என்றும், ஒரியா மொழியை ஒடிசா மொழி என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏப்ரல்!
விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்!
செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்!
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்.
மே!
நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
ஜூன்!
பிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் காலமானார்!
பிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்.
ஜூலை!
நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரணாப் முகர்ஜி!
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
அசாம் வன்முறை: இன்று பிரதமர் ஆய்வு!
அசாம் மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
இந்திய விஞ்ஞானிகள் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கி உள்ளனர். இந்த ஏவுகணையை சோதித்து பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்காக ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறுவப்பட்டிருந்தது.
ஆக்ஸ்ட்!
மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் மரணம்!
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
செப்டம்பர்!
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்!
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது இந்த முடிவு எட்டப்பட்டது.
ஆதரவை விலக்கிக் கொண்டார் மமதா!
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தந்து வந்த ஆதரவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஜிசாட்-10 செயற்கை கோள் வெற்றிகரமாக பாய்ந்தது!
இந்தியாவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் -10 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அக்டோபர்!
சோனியா மருமகனுக்கு ஓவர் டிராஃப்ட் வழங்கிய பொதுத் துறை வங்கி!
சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா குறுகிய காலத்தில் 500 கோடிகளுக்கும் மேலாக சொத்துக்களை குவித்தது எப்படி என்று அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையான கேள்விகளை எழுப்பியதால் திக்குமுக்காடிப் போயுள்ளது காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில் தனது கணக்கில் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே வைத்திருந்த வத்ராவுக்கு பொதுத் துறை நிறுவனமான கார்ப்பரேஷன் வங்கி ரூ.7.94 கோடி ரூபாய் அதிகப்பற்று(O/D) வழங்கியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சயீப் அலி கான், கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டௌடி பாலிவுட் முன்னாள் நட்சத்திரம் ஷர்மிளா டாகூர் ஆகியோரின் மகனும் பாலிவுட் நட்சத்திரமுமான சயீஃப் அலி கான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார்.
கிங்பிஷர் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு!
ஊழியர்களுக்கு சம்பளம் தொகை கொடுக்காத நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.
டெங்குவால் இந்தி பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா காலமானார்!
பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மும்பையில் காலமானார்.
பா.ஜ.க.விலிருந்து விலகினார் எடியூரப்பா!
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பா.ஜ.க.விலிருந்து திடீர் விலகியுள்ளது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நவம்பர்!
தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர் எர்ரன் நாயுடு விபத்தில் பலி!
தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு கார் விபத்தில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தரைதட்டிய சரத் பவார் கப்பல் பற்றிய திடுக் தகவல்கள்!
சென்னையில் நீலம் புயல் காரணமாக தரைதட்டி நிற்கும் மத்திய அமைச்சர் சரத் பவாருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பிரதீபா காவேரி குறித்து தினமும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன
பால் தாக்கரே காலமானார்!
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவ சேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
4 ஆண்டுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார் அஜ்மல் கசாப்!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். இதனை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிபடுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்!
உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஐ கே குஜ்ரால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
டிசம்பர்!
அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு வெற்றி!
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவானதால் எதிர்கட்சிகள் தீர்மானம் தோல்வியடைந்தது.
சிதார் இசையுலகின் பிதாமகன் ரவிசங்கர் காலமானார்!
பிரபல சிதார் கலைஞரான பண்டிட் ரவி சங்கர் மூச்சு திணறல் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.
இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது - மாயாவதிக்கு வெற்றி!
சமாஜ்வாடி கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு வீசப்பட்ட கொடுமை தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றி!
குஜராத் மாநிலம் மணிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நரேந்திர மோடி 3வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!
நடப்பு ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் இவ்விருது 24 மொழிகளில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
டெல்லி கற்பழிப்பு விவகாரம்: மாணவிகளுக்கு தடியடி!
டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு, குடியரசு தலைவர் மாளிகைக்குள் நுழைய முற்பட்ட மாணவிகளுக்கு தடியடி. ஐந்தாவது நாளாக வலுத்துள்ள இந்த போராட்டம் இந்தியா கேட் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பரவியுள்ளதால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டெல்லி மாணவி உயிர் பிரிந்தது!
டெல்லியில் 6 பேர் கொண்ட காமக்கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிர் பிரிந்தது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.