ரத்தப்பரிசோதனையின் மூலம் நாம் எவ்வளவு ஆண்டு உயிரோடு இருப்போம் என்பதை தீர்மானிக்கும் புதிய 'சர்ச்சைக்குரிய' பரிசோதனையை ஆய்வாளர்கள் செய்துள்ளனர்.
எவ்வளவு வேகத்தில் நம் உடல் உறுப்புகள் முதுமையடைகின்றன என்பதை ரத்தப்பரிசோதனை மூலம் கூறிவிடமுடியும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
குரோமோசோம்களின் முடிவில் உள்ள டெலோமியர்ஸ் (Telomeres) என்ற நுண் அமைப்புகளின் நீளத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஆய்ளைக் கணித்து விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது செல்கள் பிரியும்போது குரோமோசோம்களை சிதையாமல் பாதுகாக்கும் டெலோமியர்ஸின் நீளத்தை கணக்கிடுவதன் மூலம் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
ரத்த செல்களில் டெலோமியர்ஸ்களின் அளவு குறைவாக எவ்வளவு டெலோமியர்ஸ்கள் உள்ளன என்பதைப் பொறுத்து ஆயுளைக் கணித்து விடமுடியும் என்கின்றனர் இந்த லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
ஏற்கனவே நூற்றுக்கணக்கான பிரிட்டன்வாசிகள் இந்த பரிசோதனையை செய்து கொண்டுள்ளதாக 'தி இன்டிபெண்டன்ட்' கூறியுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களின் வசதிக்கேற்ப இந்த புதிய பரிசோதனை அனேகமாக வாழ்வின் இன்றியமையாத டெஸ்ட் ஆகிவிடும் என்கின்றனர் இந்த ஆய்வை சடத்திய நிறுவனத்தினர்.
இன்னும் கூறப்போனால் கொலஸ்ட்ரால் டெஸ்ட் அளவுக்கு இதுவும் இன்றியமையாததாக மாறிவிடும் என்கிறார் ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீபன் மாட்லின்.
ஆனால் இந்த ஆய்வினால் பயன் எதுவும் இல்லை என்று நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது