ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்….
ஃபேஷியல் செய்யும் முன் :
*எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ணவேண்டும். சருமம் ஃபேஷியல்
செய்வதற்கு சரியாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேண்டும். அதிலும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவ ர்கள் ஃபேஷியல் செய்யும் முன் அழகு நிபுணர்களை பரிசோதிக்க வேண்டும்.
* முகத்தில் பருக்கள் அல்லது பரு இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் கெட்டுவிடும். மேலும் பரு முகம் முழுவதும் பரவி, அழகை கெடுத்துவிடும்.
* ஃபேஷியல் செய்யும்முன் வெயி லில் செல்லக் கூடாது. ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் பட்டால், ஃபேஷியல் செய்த பின்னர், அதன் விளைவு தெரிய வரும். ஆகவே ஃபேஷியல் செய்யப் போகும்முன் நீண்ட நேரம் வெயியில் செல்லா மல் இருப்பது நல்லது. சொல்லப்போனால் வெயில் படாதவாறு ஒரு வாரம் இருந்தால், நல்லது.
ஃபேஷியல் செய்த பின்னர்…
*ஃபேஷியல் செய்தபின்னர், முகத்தை விரல்களால் தேய்க்கக்கூடா து.
* ஃபேஷியல் முடிந்தபின் 2 மணி நேர த்திற்கு முகத்தைகழுவ கூடாது. வே ண்டுமென்றால் முகம் எண்ணெய் பசையுடன் இருந்தால் மட்டும்தான் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வே ண்டும்.
* இந்நேரத்தில் புருவத்தை வடிவமை த்தல், முகத்திற்கு ஆவி பிடித்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பின்னர், சருமம் மிகவும் சென்சிடிவ் வாக இருக்கும். அந்நேரத்தில் புருவத்தை வடிவமைத்தால், ஈஸியா க வந்துவிடும். ஆகவே அவற்றை யெல்லாம் செய்யாமல், சருமத்தை சற்று ரிலாக்ஸ் ஆக விடுங்கள்.
*ஃபேஷியல் செய்தப்பின்னர், 2-4 மணி நேரத்திற்கு வெயிலுக்கு செ ல்லவேண்டாம். இதனால் புறஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்துளைகளையும் பாதிப்படை ய செய்யும், பின் ஃபேஷியல் செய்த தே வீணாகிவிடும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃபேஷியல் செய்ததன் பலனை முற்றிலும் அடைவதோடு, முகம்நன்கு அழகாக, பளபளப்போடு மின்னும்.