மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு காரணம்
நம்முடைய பழக்க வழக்கங்களே. அந்த ஒரு சில பழக்க வழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அது மட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கரு வளையமா னது வரும்.
அந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெரிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்க ளை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின் பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகா க வைக்க, இதோ சில டிப்ஸ்…
1. மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதி கமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்ப தால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப்பொருட்கள் பயன்படுத்தும்போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப்பொருட்களை எல்லாம் வா ங்கி உபயோ கிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
2. நோய்கள் : அனிமியா மற்றும் சிறு நீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கரு வளையங்களையும் போக்கும்.
3. களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். மேலும் சரியான தூக்கம் இல்லா விட்டாலும், கண்களில் கரு வளையமானது வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
4. நீர் குறைவு: குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கரு வளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலி ல் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கரு வளையத்தை உண்டாக்கி விடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.
6. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களைவிட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.