Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

கண் தானம் செய்வது எப்படி?



தெரிந்துகொள்வோம்

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.

2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

1.நாய் கடியால் இறந்தவர்கள்,

2.டெட்டானஸ்,

3.எய்ட்ஸ்,

4.மஞ்சள் காமாலை,

5.புற்றுநோய்,

6.மூளைக்கட்டி,

7.உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.



படித்தவர்கள் அனைவரும் ஷேர் செய்யவும் நண்பர்களே...

Followers

Comments Please...