skip to main |
skip to sidebar
ஜிம்முக்கு போவது ஆடம்பரமா?
என்ன விதத்தில் உடல் வடிவமைப்பை பெறுவது, அதிலும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அந்த இலக்கை அடைவது என்ற ஆர்வமும் நோக்கமும் அவசியம். அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சி கூடங்களும் பயிற்சியாளரும் உதவுவர்.
உடற் பயிற்சி செய்வோரும் அதற்கான கட்டுப்பாடுகள், குறிப்பாக உணவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். முறையற்ற உணவு காரணமாக விரும்பிய உடலமைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்கு உடற்பயிற்சி செய்வோரே பொறுப்பு. மேலும், ஸ்டீராய்ட், மது, புகை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஜிம்முக்கு செல்வது ஆடம்பரமாக கருதப்பட்டது. பின்னர், தனிப்பட்டவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் பொருத்து அமைந்தது. இன்றைய சூழ்நிலையில், உடல் நலம், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது.