சளிக்கட்டு குணமாக எளிய வழி!
கோடைக் காலத்தில் நாம் செய்யும் சில தவறுகளால் சளிப் பிடிக்க வாய்ப்புள்ளது. அதாவது தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது.
குளிர்சாதனத்தின் குளிர்ந்த காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல். காற்றோட்டமில்லாத சூடான அறையில் வென்னீரில் குளித்துவிட்டு, உடனே குளிர்ந்த காற்றுள்ள அறையில் வந்து நிற்பது.
உடலில் நல்ல வியர்வை இருக்கும் போது அது அடங்கும் முன்னரே குளிர்ந்த பானத்தைப் பருகுவது போன்றவற்றால் சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
சளி பிடித்து நீர்க்கோர்வை, மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவை ஏற்பட்டால் அதனைத் தவிர்க்க வீட்டிலேயே கை வைத்தியம் செய்யலாம்.
சுக்கு, கொத்தமல்லி விதை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பது, சூடான பாலுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது, மோரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.