Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

 remove the fur on the faceபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி? 


முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க

ஐந்து வழிமுறைகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் லேசர் போன்ற அதி நவீன சிகிச்சை வந்துவிட்டிருந்தபோதிலும், இயற்கை மருத்துவமுறைக்கு ஈடாகாது. 

நவீன சிகிச்சை முறைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த
முறையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. மேலும் முகப் பொலிவு, முக அழகு கூடும்.
முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளே பிராதான மருந்துப்பொருளாக பயன்படுகிறது.

ஒரு சில பெண்களுக்கு முகத்தில் மட்டுமல்லாது கை,கால்கள் என முடிகள் இருக்கும். இவற்றை நீக்குவதற்கு கீழ்க்கண்ட முறைகள் மிகவும் பயனளிக்கும். 

கஸ்தூரி மஞ்சளை அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது மூலிகை கடைகளில் அவர்களே அரைத்து விற்பனை செய்கிறார்கள். இந்த கஸ்தூரி மஞ்சளோடு பாலாடையை சேர்த்து பூசி வர முகத்தில் இருக்கும் முடிகள் மறையும். 

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் படுக்கப் போகும்முன் முகத்தில் பூசிக்கொண்டு படுக்கவும். காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவினால் படிப்படியாக முகத்தில் உள்ள முடிகள் மறைந்துவிடும். 

மற்றுமொரு முறை மஞ்சளுடன் பப்பாளிப் காயையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் விழுந்து முகம் பொலிவு பெறும். 

பசும்பாலுடன் பாசிப்பயறு தோலைக் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் அனைத்தும் போயே போச்சு.... இனி உங்கள் முகம் முடிகள் இல்லாமல் பளபளக்கும்.. தொடர்ந்து இந்த முறைகளை செய்துவர நல்ல பலன் கிடைக்கும். 

தற்போது கடைகளில் கிடைக்கும் hair remover, losans, மற்றும் நவீன லேசர் சிகிச்சைப் போன்றவைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் கவனத்தில்கொண்டு இந்த இயற்கையான முறைகளைப் பின்பற்றி முகத்தை அழகூட்டுங்கள்

================================================================

தேவையற்ற முடியை நீக்க...அழகு குறிப்புகள்.,

 ஆண்களுக்கு மீசை இருப்பது போல், பெண்களுக்கு முகத்தில் முடி உள்ளது. தேன், குங்குமப்பூ, மஞ்சள் எல்லாம் பூசிப் பார்த்தும் முடி எதுவும் உதிரவில்லை. இந்த முடியைப் போக்க என்ன செய்யலாம்?
தனியாக ஒவ்வொரு ரோமமாக இருந்தால், "த்ரெடிங்' செய்யலாம். "ப்ளீச்' செய்தால் ரோமத்தை நீக்க முடியாது. ஆனால், நிறம் மாறும். இதனால், பார்த்ததும் ரோமம், "பளிச்'சென தெரியாது. மீசை போல் இருக்கும் பகுதியிலோ, தாடையிலோ, ஹேர் ரிமூவிங் கிரீம் பயன் படுத்துவதும், "வாக்சிங்' செய்வதும் நல்லதல்ல. கிரீம்கள் சருமத்தின் அடிப்பகுதி வரை பரவுகிறது. இதனால், சருமத்தின் நிறம் காலப்போக்கில் மாறும். முகத்தில், "வாக்சிங் செய்வதால், சருமம் அதிகமாக நெகிழ்ந்து போகும்.

இப்போது எலக்ட்ரோலிசிஸ் மற்றும் லேசர் மூலம் செய்வதால் அதிக பயனுள்ளது. சிறு வயது முதலே, நீங்கள் கஸ்தூரி மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி வந்திருந்தால், இந்தத் தொல்லையே இருக்காது, செலவும் ஆகாது. "ஹார்மோன்' சுரப்பதில் ஏற்படும் கோளாறுகளாலும், இப்படி மீசை போல முடி வளரும். அதனால், உங்களுக்கு ரோமம் எதனால் வளர்கிறது என, தெரிந்து கொண்டால், நீக்குவது எளிதாக இருக்கும்.

Followers

Comments Please...