Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி ?

விண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு செய்திருப்போம் (United States)அதனால் நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம் .


முதலில் உங்கள் டெஸ்க் டாபில் ஏதாவது ஒரு பகுதியில் மவுசை வைத்து right கிளிக் செய்து கீழே கடைசியாக உள்ள personalization செலக்ட் செய்யுங்கள் .( இப்போது தெரியும் விண்டோவில் இருக்கும் உங்களுக்கு பிடித்த தீம் களை கிளிக் செய்தால் வால்பேப்பர் மற்றும் ஒலி அமைப்புகள் மாற்றமடையும் ).இந்த தீம்களில் புதிதாக ஐந்து தீம் கள் வரவைக்கப்போகிறோம் .

முதலில் Start à Control panel à Appearance and personalization à Folder Options வரும் தட்டில் view கிளிக் செய்து படத்தை பாருங்கள்


அதில் Hide protected operating system files (recommended)
என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இருந்தால் அதை நீக்கவும் இப்போது ஒரு எச்சரிக்கை விண்டோ வரும் அதில் Yes கொடுக்கவும்.

இப்போது My Computer à Local Disk (C) àஅதில் Windows à ( தேட சிரமமாக இருந்தால் G கிளிக்கவும் ) Globalization à MCT 
அதனுள்ளே ஐந்து போல்டர் இருக்கும் 


முதல் போல்டர் MTC-AU ( இது ஆஸ்திரேலியா )அதனுள்ளே மூன்று சப் போல்டர்கள் இருக்கும். அதில் Theam என்ற போல்டரை திறந்து Theam ஃபைல்ஐ டபுள் கிளிக் செய்யுங்கள்

 ஒன்று முடிந்தது . இதே போல் மற்ற நான்கு MCT போல்டரையும் திறந்து Theam ஐ ஆக்டிவேட் செய்யவும் 




.இப்போது மீண்டும் டெஸ்க் டாபில் ஏதாவது ஒரு பகுதியில் மவுசை வைத்து right கிளிக் செய்து கீழே கடைசியாக உள்ள personalization செலக்ட் செய்யுங்கள் இப்போது பாருங்கள் புதிதாக ஐந்து தீம்கள் வந்திருக்கும்..

Followers

Comments Please...