Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி


ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்திஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரெய்ஹெனே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

குரல் செய்தியாக பதிவு செய்யப்பட்டிருந்த ரெய்ஹெனே ஜப்பாரியின் செய்தியில்,

 'அன்புள்ள ஷோலே, நான் எனது வாழ்க்கையின் இறுதி பக்கத்தை அடைந்துவிட்டேன் என்பதை நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை.
இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கப்பட செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?

அன்று இரவு நான் கொல்லப்பட்டிருக்கவெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் கற்பழிக்கப்பட்டேன் என உனக்கு தெரிந்திருக்கும். என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய்.

ஆனால், இப்போது கதை மாறியுள்ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் கொசுவை கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை மெதுவாகத்தான் அகற்றியிருக்கிறேன். இப்போது நான் கொலையாளியாக இங்கு நிற்கிறேன்.

எனக்காக நீ அழவேண்டாம், எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, இதயமோ வெறும் தூசியாக மாறவேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப்படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர்களுக்கு பரிசாக அளித்துவிடு. என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனை செய்யவும் வேண்டாம்.

நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம். எனக்காக நீ அங்கு வந்து வேதனைப்பட்டு அழ தேவையில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்துவிட முடிந்த வரை முயற்சி செய். என்னை காற்று எடுத்து செல்ல விட்டுவிடு'.

Followers

Comments Please...