Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பாகற்காயின் பத்து மருத்துவ குணங்கள்!

பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. 2. தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம். 3. பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்,  ய்த்தொற்றுகள்அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும். 4.பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில்
உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம். 5.டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 6.பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்குமிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு,கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது.இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. 7.ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. 8.பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது. 9.புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது. 10.உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது.இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது. 

Followers

Comments Please...