சொந்த எழுத்துருக்கள் உருவாக்க |
அந்த தளங்களில் மட்டும் எப்படி இத்தகைய
எழுத்துருக்கள் உள்ளன?இதுபோன்ற எழுத்துருக்களை நாமும் பயன்படுத்த முடியுமா? நமக்கும் கிடைக்காதா?
என்று கூட நினைத்திருக்க கூடும்.
அத்தகைய வித்தியாசமான எழுத்துருக்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா..? அப்படி நீங்கள் நினைத்ததிருந்தால் உங்களுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும்.
ஆம் நண்பர்களே...!
வித்தியாசமான எழுத்துருக்களை மென்பொருள்கள் துணையுடன் உருவாக்குகிறார்கள்.உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நீங்களும் கூட எழுத்துருக்களை உருவாக்க முடியும்.
அதற்கு மென்பொருள் சார்ந்த அறிவு எதுவுமே தேவையில்லை.. அந்த மென்பொருளை கணினியில் இயக்கிவிட்டு, தோன்றும் பெட்டியில் உள்ள எழுத்துகளை உங்கள் விருப்பமான வடிவத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். இது மிக எளிதான ஒன்றுதான்..
இவ்வசதியை நமக்களிக்கும் நிறுவனம் smdsafa.net
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்...!
மென்பொருளைத் திறந்து தோன்றும் எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் மாற்றி அமையுங்கள்..!
மாற்றியமைக்கப்பட்ட எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான சொற்செயலிகளான MS word, Word Pad போன்றவைகளில் பயன்படுத்த தொடங்குங்கள்...!
இம்மென்பொருள் மூலம் இதற்கு முன்பே கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எழுத்துருக்களையும் மாற்றி அமைக்கலாம் என்பது கூடுதல் வசதி.
மென்பொருளில் அடங்கியுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே எழுத்துருக்களை எளிதாக வடிவமைக்க முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 (32/64 பிட் )ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவருக்குமே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக போட்டோஷாப், கோரல் டிரா போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி டிசைனிங் வொர்க் செய்யும் நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download Font Creator