Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்

Natural Bleaching
பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். 
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும். 


ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும். 

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி? 

கடலை, மஞ்சள்தூள்: 

Natural Bleaching
இயற்கை அழகு குறிப்புகள்
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும். 

தேன், எலுமிச்சை: 

தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.

முட்டை, சர்க்கரை, சோளமாவு: 

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....

கடலை மாவு, தயிர், மஞ்சள்: 

இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும். 

Followers

Comments Please...