சாதரணமாய் பெண்களில் சிலர் குளிக்கும்போதோ, பொது இடங்களில் உடை மாற்றும்போதோ தன்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதை கவனிப்பதே இல்லை... அவர்களுக்கான அபாய எச்சரிக்கை இது!
நடிகைகளைத்தான் இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று இல்லை.பொது இடங்களில் கூட இப்படி நடக்கிறது! உஷார்!
கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும்.
இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.
இவைகளை சுலபமாக கண்டறியும் முறை…
உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி.. இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.