பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.
தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
உருவாக்குவது எப்படி:
முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.
பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create Community என்ற பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மற்றும் உங்கள் Community-ல் உள்ள மற்றொரு நண்பருக்கும் அட்மின் வசதியை தர விரும்பினால் இந்த லிங்கில் Enable Admin Rights to Others சென்று எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.