
ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ
chat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.

இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய :
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose பட்டனை அழுத்துங்கள்.
உங்களுக்கு ஒரு புதிய விண்டோ வரும் அப்படி வரவில்லை எனில் compose பகுதியில் உள்ள new compose experience என்பதை கிளிக் செய்யவும்
.

அடுத்து கீழே இருப்பதை போல ஒரு கருமை நிற விண்டோ வரும் அதில் உள்ள Got it என்ற பட்டனை அழுத்துங்கள்.

Got It பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு புதிய compose pop-up விண்டோ வந்திருக்கும்.
இனி மற்ற மெயில்களை பார்த்து கொண்டே மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம். ஒருவேளை இந்த புதிய compose விண்டோ பிடிக்கவில்லை எனில் மறுபடியும் பழைய compose விண்டோ வர வைக்க கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள அம்பு குறி மீதி கிளிக் செய்து அதில் வரும் Switch back to old Compose என்பதை கிளிக் செய்தால் பழைய ஸ்டைலுக்கு மாறிவிடும்.