Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

குமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உதயமான வரலாறு ( நவம்பர் 1 )

குமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறது. நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து
மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார்.எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள். இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் பாசத்தோடு திரு மார்சல் நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.

 வரலாறு

தமிழகத்தின் தென் எல்லை பகுதியாக விளங்குகிறது எழில் கொஞ்சும் குமரி மாவட்டம். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்து. இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இனைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி [1]மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்கள் மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

திருவிதாங்கூர் சாதி கொடுமைகள்

திருவிதாங்கூர் சாதி கொடுமைகள்:- திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (Princely State) ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போண்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதி கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன. உயர் சாதியினர் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவதற்கும் இவர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. சமுதாயத்தில் இவர்களது கீழான நிலையை விளக்கும் வண்ணம் அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், உபயோகிக்கும் பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலவிதமான விதிமுறைகள் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இறைவழிபாடு செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவரகளுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டது. பொருளாதார ரீதியாகவும் பல கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. அபராதம், வரி என்ற பெயர்களில் பல விதமான சுமைகள் அவர்கள் மீது ஏற்றப்பட்டன. இந்துக் கோவில்களுக்கும், சாதி நிலக்கிழார்களுக்கும் ஊதியமின்றி பணி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்விக் கூடங்களில் அனுமதியும், அரசுப் பணிகளில் வாய்ப்பும் மறுக்கப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தென் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார் இனத்தவராவர்.
சாதி வரிசை:- இங்கு நம்பூதிரி பிராமணர்களான ஆரிய வம்சா வழியினர் சாதி வரிசையின் முதலிடத்திலும், நாட்டையாண்ட அரச பரம்பரையினர்களான சத்திரியர்கள்இரண்டாமிடத்திலும், வணிகத்தைத் தங்கள் தொழிலாக கொண்ட வைசியர்கள் மூன்றாமிடத்திலும், இம்மூவர்களுக்கும் ஏவல் தொழில் புரிந்து வந்த ஆரிய கலப்பின சூத்திரர்களான நாயர்கள் நான்காம் இடத்திலும் மனுதர்ம அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டனர். இந்த நான்கு பிரிவுகளிலும் உள்ளடங்காத பூர்வகுடி மக்களைபஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் என்று குறிப்பிட்டனர். சமூகக் கட்டுப்பாடுகள்- ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்குஆளாக்கப்படுவர். தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. நாடார் இனத்தவர் அணியும் ஆடை அணிகலன்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உயர் சாதியினரைப் போன்று குறிப்பாக நாயர் சாதியினரைப் போன்று ஆடை அணிய அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும், பெண்களும் கால் மூட்டுக்கு கீழும், இடைக்கு மேலும் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. உயர் சாதியினர் முன் கீழ் சாதி பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று உயர் சாதியினர் கருதினர். இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது. விலையுயர்ந்த ஆபரணங்களை அணியவும், குடை பிடிக்கவும்,காலணி அணியவும், அனுமதி மறுக்கப்பட்டது. ஓடு வேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. திருமண பந்தல்கள் அலங்காரம் மறுக்கப்பட்டது. பெண்கள் தண்ணீர் குடத்தை இடையில் சுமந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடத்தை தலையில் வைத்து இருகைகளாலும் அதை தாங்கிப் பிடித்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டனர. சமயக் கட்டுப்பாடுகள்:- இறைவழிபாடு செய்வதிலும், பலவிதக் கட்டுப்பாடுகள் கீழ்சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. [3]
அரசும், உயர்சாதியினரும் நிர்வகித்து வந்த கோவில்களில் நுழையவோ, வழிபாடு நடத்தவோ, கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் செல்லவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தங்கள் வழிபாட்டிற்கென இவர்கள் எழுப்பிய கோவில்களில் கூட உயர்சாதியினர் வழிபடும் சிவன், பிரம்மா, விட்னு போன்ற தெய்வங்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரபத்திரன், மாடன், சுடலை, வீரன், மாடசுவாமி, இருளன், முத்தாரம்மன், பத்ரக்காளி போன்ற தெய்வங்களையே இவர்கள் வழிபட்டனர். மதச்சடங்குகள் அனுசரிப்பதிலும் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெய், பால், போன்ற பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்த இவர்களுக்கு அனுமதியில்லை. கள், சாராயம் போன்ற பொருட்களை இவர்கள் பயன்படுத்தினர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள்:- பொருளாதார ரீதியாகவும கீழ்சாதியினர் பல இன்னலுக்கு ஆளாகினர். அபராதம், வரி, நன்கொடை, என்ற பெயரில் வருமானத்தின் பெரும் பகுதியை அவர்கள் இழந்தனர். பிராயசித்தம் தவறு செய்து தண்டிக்கப்பட்டவரகள் அரசுக்கு செலுத்திய அபராதத் தொகையே பிராயச்சித்தம் எனப்பட்டது. பிராயச்சித்தம் என்று பெயரில் தங்களுக்கு விருப்பமான தொகையை அரசு அதிகாரிகள் வசூலித்துக் கொள்ளலாம். வசூலிக்கப்பட்ட தொகையில் 20 விழுக்காடு தொகை போக மீதியை அரசுக் கருவூலங்களில் செலுத்த வேண்டும். இதனால் காரியக்காரர்கள் வசுலில் ஒரு பகுதியை மட்டும் கருவூலத்தில் செலுத்திவிட்டு மீதியை தங்களுக்கென வைத்துக் கொண்டனர். புருசந்தாரம்:- பரம்பரை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி புருசந்தாரம் ஆகும்.இதன் படி சொத்து மதிப்பில் 40 விழுக்காடுக்கும் அதிகமான தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். பிராயசித்தத்தைப் போன்றே இந்த வரியிலும் ஒரு பகுதியை அதை வசூலித்த காரியக்காரர்களே வைத்துக் கொண்டனர். தலைவரி:- நாடார் இனத்தவரை அதிகம் பாதிப்புள்ளாக்கிய மற்றொரு வரி தலைவரி (Poll tax) ஆகும். பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கும் இவ்வரியை உறவினர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரியை கொடுக்க முடியாத காரணத்தால் பலகுடும்பங்கள் அண்டைமாநிலமான தமிழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்தவர்களின் உறவினர்களிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இதர வரிகள்:- தலைவரியைத் தவிர தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, என்று பல விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன.
நாடார்கள் பனையேறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஏணிக்கு ஏணிகாணம் என்ற வரியும், தளைக்கு (தளை என்பது பணை ஏறும் தொழிலாளிகள் பணை ஏறும் போது கல்களில் அணிந்து கொள்ளும் பனை நாரினால் செய்யப்பட்ட வளையம்) தளைகாணம் என்ற வரியும் வசூலிக்கப்பட்டன. கள் தயாரிப்பவர்களிடமிருந்து ஒரு குடம் கள்ளிற்கு ஒரு நாளி கள் வீதம் வரியாக வசூலி்க்கப்பட்டது. [ ஒரு குடிசைக்கு ஒரு பணம் வீதம் குப்ப காச்சா(kuppa katch) என்ற வீட்டு வரியும் வசூலிக்கப்பட்டது. வீடுகளுக்கு கூரை மாற்றும் போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்றொரு வரியும் வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் அங்கு வளர்கின்ற பனை, தென்னை, கமுகு, மா, பலா,புளி, புன்னை, இலுப்பை போன்ற மரங்களுக்கும் வரி கொடுக்க வேண்டும். திருமணமான பெண்களிடமிருந்து தாலியிறை வசூலிக்கப்பட்டது. சிலவகையான ஆடைகள் அணிவதற்கும், அணிகலன்கள் அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கு, குடைப் பிடிப்படதற்கு, பல்லக்கில் செல்வதற்கு, திருமணம் நடத்துவதற்கு என ஒவ்வொன்றிற்கும் அரசுக்குப் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சேர வேண்டியப் பணத்தைவிட பன்மடங்கு அதிகமாக அதிகாரிகள் வரி வசூலித்து வந்ததால், அதிலிருந்து விடுபட சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள். வரி கொடுக்க தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் முதுகில் பாரமான கற்கள் எற்றி வைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்க விடுதல், சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல் போன்றக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். விருத்தி, ஊழியம்:- உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளை பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டுவரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாய்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது. நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுதுப்பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக் காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். நாடார்கள் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இலவசமாக வேலைச்செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. ர்க்கவும வேண்டும். உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளை பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டுவரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாய்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது. நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுதுப்பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக் காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். நாடார்கள் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இலவசமாக வேலைச்செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு இந்த பொருட்களை திருவனந்தபுரத்திற்கு தலைச்சுமடாக சுமந்து கொண்டு சேர்க்கவும வேண்டும்தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பொருட்களை திருவனந்தபுரத்திற்கு தலைச்சுமடாக சுமந்து கொண்டு சேர்க்கவும வேண்டும்.

போராட்டத்திற்கான காரணங்கள்

தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகத்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறலாம். 

முதல் காரணம்

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறுத் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன்படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை தூக்குப் பாசனத் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இந்த முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டும், இப்பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது

இரண்டாம் காரணம்

 திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

மூன்றாம் காரணம்

தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு

பட்டம் தாணுபிள்ளை இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனதும் அன்னாரது நாடார் விரோத அடக்கு முறைகளை மீண்டும் தொடங்கினார். இதனை எதிர்த்து நாடார் சமுதாயம் 11.8.1954 – அன்று விடுதலை நாள் கடைபிடித்தது. இதில் கம்யூனிஸ்ட்களின் குறிப்பாக ஜுவாவின் கட்சி ஆட்கள் தொடுவட்டியில் புதுக்கடையிலும் வன்முறையில் இறங்கினர். அதன் காரணமாக தொடுவட்டியிலும் புதுக்கடையிலும் மலையாளி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். தவிரவும் போலீஸ் படையினரின் அத்து மீறல்களும், அட்டூழியங்களும் தாங்கொணா அளவிற்கு விளவங்கோடு மற்றும் கல்குளம் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக குறிப்பாக நாடார்களுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்டன. பலர் காட்டு பகுதிகளுக்கும், அனேகர் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டிற்கும் சென்று தஞ்சமடைந்தனர். தி.த.நா.கா. சர்வாதிகாரி திரு. குஞ்சன் நாடார் 09.08.2954-ல் விடுதலை நாள் கடைபிடிப்பதற்கு நிச்சயித்திருந்தார். ஆனால் ஜுவாவின் பேச்சை நம்பி, அதை 11.08.1954 க்கு மாற்றினார். “கம்யுனிஸ்டு கட்சியின் திருவிதாங்கூர் சமஸ்தான கிளையால் அனுப்பப்பட்டே ஜுவா இந்த ஆலோசனையைச் சொன்னார் … இதனால் ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்று ஐயுற்றேன். என் ஐயம் பொய்யாகவில்லை. 11.08.1954-ல் நடக்கவிருந்த பொது வேலை நிறுத்தத்தை ஒத்திப்போட்டு விட்டதாக கம்யூனிஸ்டு செல்வாக்கிலிருந்த – கேரளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் - அதாவது ஆகஸ்டு 10-ல் அறிக்கை விட்டுவிட்டன – கதையை வளர்ப்பானேன். ஆகஸ்டு 11-ல் மார்த்தாண்டம் என்னும் ஊரில் - ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது மலையாளப் போலிசார் சுட்டனர். ஆதனால் 11 தமிழர்கள் இறந்தனர்.” [4] ஜுவாவின் இந்த கைங்கரியத்தால் 11 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டார் எவருமில்லை. ஜுவாவை நம்பி களத்தில் இறங்கிய குஞ்சன் நாடார் மலையாள போலீசாரால் அடித்து நொறுக்கப்பட்டு குற்றுயிரானார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜுவா குமரியில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாவது கூறியிருக்கலாம். ஆனால் அவரோ தலைமறைவாகிவிட்டாராம். “நாகர்கோவிலிலிருந்து புறப்படும் முன் திரு. ப. ஜுவானந்தம் அவர்களைச் சந்திக்க முயன்றேன். அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்பட்டது. புரட்சிக்கு மக்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் தலைமறைவாகி விடலாம். ஆனால் அவர்களை நம்பிப் புரட்சியில் ஈடுபட்ட மக்களெல்லாம் தலைமறைவாகிவிடுவது சாத்தியமில்லையல்லவா” [5] ஜுவானந்தம் தலைமறைவாகி விட்டதாக ம.பொ.சி. இங்கே கூறுகிறார். ஆனால் மு.டு.ளு.சந்தானமோ ஜுவா, காடும் மலையும் கடந்து பணகுடி சென்று, சென்னைக்கு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். “கடுக்கரை தொண்டு வழியாக காலில் கொப்புளங்கள் ஏற்பட நடந்து பணகுடி வந்து பின் வள்ளியூர் கலா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.” [6]ஆக ஜுவா, கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டு, ஒளந்தோ, ஓடியோ, நடந்தோ, திருவவிதாங்கூரை விட்டு வெளியேறி தன்னுயிர் காத்துக் கொண்ட வீரனானார். 

இராஜாஜியின் உதவி

இந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. [8] ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார்[9]
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நாள் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (B.K. Mukerjee), “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”[10]
“திருவிதாங்கூர் – கொச்சி தென் பாகத்தில் ஒரு ஸ்தடபித்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அலுவலகங்கள், முனிசிபல் செயலகங்கள், நீதி மன்றங்கள் முதலியவை சரியாக செயல்படவில்லை. இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் பலரும், வழக்கறிஞர்களில் சிலரும் சிறையிலிருக்கிறார்கள். இது போலவே சட்டப்பேரவையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிகள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை குலைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்குத்தான் இப்படியென்றால் திருவிதாங்கூர் – கொச்சிக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் 3000-க்கும் அதிகமான உள்ளுர் தமிழர்களுக்கு உள்ளே வர முடியவில்லை. நிலைமை அவ்வளவு சீர் கெட்டு இருப்பதால் நேர்மையான நீதிபூர்வமான விசாரணை அங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று பதில் இறுத்தார். இந்த நிலையில் திரு-கொச்சி அட்வகேட் ஜெனரல் மாத்யூ முறிக்கனைப்பார்த்து நீதிபதி விவிலியன் போஸ் கேட்டார்…“எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன? அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” [11][12]
தாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”
பசல் அலி கமிட்டி

மொழி வழி மாகாணங்கள் மாநிலங்களைச் சீரமைக்கும் பிரச்சினையை பரிசீலித்து அறிக்கை கொடுக்கும் பொருட்டு 1953 இல் இந்திய அரசு, பஸல் அலியைத் தலைவராகவும் ஹெச்.என். குன்ஸ்ருவையும் கே.எம். பணிக்கரையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில சீரமைப்புக் குழுவினை நியமித்தது. நாயரும் உறுதியான மலையாளி சார்பினையுடையவருமான கே. ஏம் பணிக்கர் அக்குழுவில் இருந்தது தமிழர் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது: அக்கமிஷன் மலையாளப்பகுதி முழுவதையும் சென்னை மாநிலத்திலிருந்து மாற்றுவதற்குப் பரிந்துரை செய்தது. தென் திருவிதாங்கூரில் நான்கு தாலுகாக்களையும், செங்கோட்டைத்; தாலுகாவை முழுமையாகவும் தமிழகத்துடனே இணைக்கலாம் என்று அக்கமிஷன் பரிந்துரைத்தது. இதில் தேவிகுளம் - பீர்மேடு முற்றிலும் விடுபட்டிருந்தது. ஆனால் திருவிதாங்கூர், கொச்சி அரசிலிஜருந்து ஒரு சில தமிழ் பகுதிகளைத்தான் மாற்றியது. மலபார் கேரளாவோடும் தென்திருவிதாங்கூர் தமிழ்நாட்டோடும் இணைக்கப்பட்ன. முடிவாக பசல் அலி கமிஷனின் ஆணைப்படி தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரையும் கேரளத்துக்கு விட்டுத் தரப்பட்டிருந்தன. ஆனால் இங்கேயும் தமிழர்கள் பெருவாரியாக வாந்திருந்தனர். முக்கியமாக மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நஞ்சைநிலங்களுக்குப் பாசன வசதிகயைத் தருகின்ற முல்லை- பெரியாறு நீர் தேக்கத்தையும் கேரளத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. இவைகளைக் கண்டு நேசமணி அதிர்ச்சியடைந்தார் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவின் மீது விவாதம் நடக்கும் போது விடுபட்டுப் போன இந்தத் தமிழ் பிரதேசங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று மூன்று நாட்கள் வாதாடினார் நேசமணி. வரலாறுகளை முன் நிறுத்தியும், பொருளாதாரத்தை சுட்டிக்காட்டியும், மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டியும், தாய் மொழியின் அடிப்படையிலும் அந்த அஞ்சா நெஞ்சன் தன்னந்தனியாக நின்று வாதாடினார். இவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அன்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் முன் வரவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.கள் அங்கே இருந்தனர். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். நெய்யார் அணைநீரை இழந்தோம். புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதியை இழந்தோம். இங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனையை இழந்தோம். சேங்கோட்டைத் தாலுகாவில் பாதியை இழந்தோம். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணையையும் இழந்தோம். இந்த இழப்புகளுக்கெல்லாம் யார் காரணம்? [14]
எழுபது சதவீதத்திற்கும் குறையாத மக்கள் ஒரு குறிப்பட்ட மொழி பேசினால் அப்பகுதி ஒரு மொழி சார்ந்த பிரதேசமாகும் என தார் குழு (Dar Commission) கருதியது. அதன்படிபார்த்தால் தேவிகுளம், பீர்மேடு தமிழ்ப் பகுதியாகும்; ஏனென்றால் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசினர். புவியியல் முறையிலும் அப்பிரதேசம் தமிழ்நாட்டின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆரம்பகாலக் குடிகளும் தமிழர்களே. 1800-1801 தென்னிந்தியப் புரட்சியின் போது நாட்டுப்பற்றாளர்கள் இந்த உயர் மலைத்தொடர் பகுதிகளை தங்கள் நடவடிக்கைளின் மையமாக் கொண்டனர். அத்துடன் தேவிகுளம், பீர்மேட்டு பகுதிகளில் உள்ள ஆறுகளும் காவிரியைப் போன்று பெரிதான பெரியாறு, பத்பா ஆறுகள், உயர்மலைத் தொடர்களில் உற்பத்தியாகி கோயம்பத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மழை குறைந்த மாவட்டங்களின் நீர்ப்பசன வசதிகளுக்கு மூல ஆதாரமாயிருந்தது.[15]
சீரமைப்பு குழு உண்மையைத் திரித்துக் கூறியதாலும், காமராஜ் அமைச்சரவை இழைத்த தவறினாலும், தமிழ்;நாட்டு மக்கள் அதன் இன்றியமையாத் தன்மையை உணரத் தவறியதாலும் தமிழ்நாடு இந்த முக்கியமான இடத்தை அர்ந்ததது. இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் குழு கூறிய வாதமாவது: “ஒரு குறிப்பட்ட மொழிப் பிரிவினர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்டத்தக்க பெரும்பான்மையினராக இருந்தல் ஒன்றே அது பற்றி இறுதி முடிவெடுக்கப் போதுமான காரணமாகக் கொள்ளக்கூடாது.” இத்தகைய அவமானங்கள் போதாதென்று இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் இடம் மாறுபவர்கள் என்றும், கேரள மக்கள் குடியேறுவதற்கும், ஆற்று நீர் தேக்கங்களுக்கும் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கு நெல்வயல்களின் பாதுகாப்பிற்கும் அப்பகுதி அவர்களுக்குத் தேவை என்றும் அறிவித்தது. இப்பெரும் ஆறுகளின் நீர் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளை விட கேரளாவில் நீர் நிறைந்த வயல்வெளிகளுக்குத்தான் தேவை எனநிலைநாட்ட முற்பட்டிருப்பது விந்தையாகும். நீர் பற்றாக்குறை மிகுந்த விருதுநகர் வாசியான காமராஜ் அப்பட்டமான அநீதி இழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்: தமிழர்களுக்கு உயர்மலைத் தொடர்கள் கிடைப்பதற்கு முயற்சி எடுக்காது மலபார் பகுதி முழுமையும் கேரளாவிற்கு கொடுக்க அமைதியாக சம்மதித்து விட்டார். இந்த சோக நிகழ்ச்சிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அறிவுக் கூர்மை மிகு கேரள முதலமைச்சர் கோவிந்த மேனனின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் இரையாகி, சீரமைப்புத் திட்டப்படி தமிழ்நாட்டடிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியான செங்கோட்டைத்தாலுகாவின் மேற்குப் பகுதியையும் பறிகொடுத்துவிட்டார். இது மற்றொரு முக்கிய ஆறான கல்லாடத்தின் உற்பத்தியிடமான அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். கேராளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி முனையின் சிகரத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். அது முக்கடல்களும் சந்திக்கும் காட்சியை எடுத்துக் காட்டும் மிகச் சிறப்பான இடம் என்பது குறிப்பிடத்தகுந்தது

போராட்ட தலைவர்கள்

  • மார்ஷல் ஏ. நேசமணி
  • அப்துல் ரசாக்
  • குஞ்சன் நாடார்
  • தாணுலிங்க நாடார்
  • பொன்னப்ப நாடார்
  • சிதம்பர நாதன் நாடார்
  • வில்லியம் நாடார்

காமராசர் உரை

இப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று தமிழக முதலமைச்சர் காமராசர், நாகர்கோவில் எசு. எல். பி கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்பு விழாவில் கீழ்கண்டவாறு ஏற்புரையாற்றினார்
நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இனைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம் என்றார்.

பலன்கள்

மக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இரிகேசன் திட்டம் ஆகியவற்றிற்கு செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும், சித்த மருத்துவக் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் தீட்டப் பட்டது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப் பட்டு திட்ட காலக் கெடுவில் முடிக்கப் பட்டது.


Followers

Comments Please...