Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பைக் திருட்டைத் தடுக்க பாஸ்வேர்டு!

பைக் திருட்டைத் தடுக்க பாஸ்வேர்டைப் பயன்படுத்தி பைக்கை இயக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரவீண் குமார் மற்றும் முகமது ஆசிப்.

அதிகம் திருட்டு போகும் பொருள்களில் இன்று முதலிடம் பிடித்திருப்பது பைக் தான். பைக் திருட்டை முற்றிலும் ஒழிக்க நினைத்தோம். அதன் விளைவாய் பிறந்ததே இந்த ‘பைக்


பாஸ்வேர்டு’தொழில்நுட்பம் .

ஏ.டி.எம்.மில் நாம் பணம் எடுக்கும் முன்னர் நமது பின் நம்பரைக் கொடுத்தால் மட்டுமே பணம் வெளிவரும். அதே தொழில்நுட்பத்துடன் பின்நம்பரைக் கொடுத்த பின்னர் பைக்கின் சாவியை ஆன் செய்தால் மட்டுமே பைக் இயங்கத் தொடங்கும்.

தவறுதலான பின்நம்பரைக் கொடுத்தால் பைக் எச்சரிக்கை ஒலி எழுப்பி காட்டிக்கொடுத்துவிடும். இந்தத் தொழில்நுட்பத்தை முழுவதுமாக உருவாக்க 1,000 ரூபாய் மட்டுமே செலவு ஆனது.

இதோடு நின்று விடாமல், பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வின் அடிப்படையில் மேலும் பல தொழில் நுட்பங்களையும் இதனுடன் இணைத்துள்ளோம்.

ஆல்கஹால் குடித்துவிட்டு பைக் ஓட்டினால் பைக்கின் செயல்திறன் தன்னிச்சையாக நின்று விடும் அளவுக்கு ஒரு தொழில்நுட்பத்தை இந்தக் கண்டுபிடிப்புடன் இணைத்துள்ளோம். மேலும், பைக்கில் செல்லும்போது செல்போன் அழைப்பு வந்தால் 10 செகண்ட் வரை மட்டுமே பேச முடியும். அதன் பின்னர் பேச முயற்சித்தால் எச்சரிக்கை ஒலியை எழுப்பிவிட்டு பைக் தானாகவே நின்று விடும்" என்று பெருமிதத்துடன் கூறி முடித்தனர், அந்த இளம் விஞ்ஞானிகள்.



##இந்த இளம் விஞ்ஞானிகளை நமது அரசுகள் ஊக்கப்படுத்தவேணடுமே.. பலரது கண்டுபிடிப்புகள் இங்கே அலட்சியப்படுத்துப்பட்டு விடுகின்றது என்பது தான் வேதனை##

Followers

Comments Please...