Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

சாஃப்ட் டிரிங்க் புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பை ஏற்படுகிறது

வெயில் காலங்கள் அல்ல மழைக்காலம் என்றல்ல தினசரி கூல்டிரிங்க் எதையாவது குடிப்பது பலருக்கு இருந்து வரும் பழக்கம் இதனை நாம் நம் ந்ண்பர்களில் பலரிடமும் பார்த்திருப்போம். ஆனால் இனிமேல் அவர்களை எச்சரிப்பதுதான் சிறந்த நட்புக்கு அடையாளம்.

அனைத்தையும் விடவும் மதுபானம் அருந்துபவர்கள் 'நாற்றம்' தெரியாமல் இருக்க பெப்சி, கோலா போன்ற பானங்களை மிக்ஸ் செய்து மது அருந்துகின்றனர். இது ஒரு மிகப்பெரிய நடைமுறையாக ராட்சதமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் நமக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

நாளொன்றுக்கு 200 மிலி அல்லது 300மிலி கூல் டிரிங்க் அருந்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்கிறது அந்த ஆய்வு.

இவர்களுக்கு மிகவும் உக்கிரமான புரோஸ்டேட் கேன்சர் என்ற பெருஞ்சுரப்பி புற்று நோய் ரிஸ்க் இருக்கிறது என்கிறது ஆய்வு.

45 முதல் 73 வயதான 8000 ஆண்களை வைத்து 15 ஆண்டுகளாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 சதவீதத்தினருக்கு புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு வரும் அமெரிக்க மருத்துவ இதழான அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரீஷன் - இல் வெளியாகவுள்ளது.

Followers

Comments Please...