நீங்கள் இரவில் மூச்சு விட
முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு
மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
• சிறிது
பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல்
கலந்து, உச்சந்தலையில்
தடவி, சிறிது
நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது
குறையும்.
• ஆகாயத்தாமரை மற்றும்
ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில்
போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும்
தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
• நொச்சி இலைகளை அரைத்து சாறு
எடுத்து, நல்லெண்ணெயில்
சேர்த்து சூடேற்றி, பின்
அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத்
தடுக்கலாம்.
• மாவிலைகளை காய வைத்து பொடி
செய்து, நெருப்பில்
போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
• சுக்கை ஒரு கப் நீரில்
போட்டு, தண்ணீர்
பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி
கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு
சேர்த்து காலை, மாலை
என குடித்து வந்தால், மூக்கடைப்பு
வருவது தடுக்கப்படும்.
• விரலி மஞ்சளை நெருப்பில்
சுட்டு, அதிலிருந்து
வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
• வெதுவெதுப்பான நீரில் இஞ்சி
சாறு, எலுமிச்சை
சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு போய்விடும்.
• ஒரு துணியில் யூகலிப்டஸ்
ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த
துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு
உடனே விலகும்.
• வெங்காயத்தை தோலுரித்து
வெட்டி, அதனை
4-5
நிமிடம்
முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில்
இருந்து உடனே விடுபடலாம்.