இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும்
மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை.
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என
இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும். முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை
செய்முறை #1
முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். Ads by
செய்முறை #2
பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை #3
இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க வேண்டும். Ads by Revcontent
செய்முறை #4
அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.
குறிப்பு
இந்த செயல்முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.