Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி?

மிகவும் விருப்பும் காய்கறி உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கை கொண்டு பொடி மாஸ்,பஜ்ஜி,போண்ட என பல வகை சமைத்து அசத்திருப்போம் இன்று நாம்  உருளைக்கிழங்கு கொண்டு, உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்யலாம் எப்படி என்று கீழே பாருங்கள்

தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கில் ஒரு ஓட்டை போட்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!

Followers

Comments Please...