Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !


1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை …

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள்
கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த .. என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை உபயோகிப்பதில்லை .. .. பாமாயில் தான் உபயோகிக்கிறோம்.

5) ரைஸ் கடாயில் உபயோகிக்கும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக உபயோகிக்கிறோம் .. அது உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை உபயோகிக்கிறோம்..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரோமேனு என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

நன்றி – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Followers

Comments Please...