
கணினியில் பதிவெழுத நான் இந்த TAMIZHA TAMIL மென்பொருளையே பயன்படுத்துகின்றேன். பயன்படுத்த மிக எளிமையான மென்பொருள் இது.
தமிழா தமிழ் விசை மென்பொருளின் சிறப்புகள்: Features of Tamil Visai
1. தமிழ் எழுத்துக்களை நேரடியாக தட்டச்சிடும் வசதி
2. ஆங்கில எழுத்துக்களை கொண்டு தமிழில் தட்டச்சிடும் வசதி
3. ஆங்கிலத்தில் தட்டச்சிடும் வசதி.
இம்மூன்று வசதிகளையும் உள்ளடக்கிய வேறெந்த மென்பொருளும் இல்லை என்பதே TAMIZHA TAMIL VISAI மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழா தமிழ் விசை மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி?
ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் தமிழா தமிழ் விசை மென்பொருளை முதலில் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
தரவிறக்கச்சுட்டி: ThamiZha! -Tamil Visai for Android SmartPhone
தரவிறக்கம் செய்து முடித்து நிறுவியதும், உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் செட்டிங்ஸ்களைச் செய்ய வேண்டும்.

2. நீங்கள் Android 2.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தினீர்களென்றால் Settings கிளிக் செய்து அதில் Languages & KeyBoards -ல் Tamil Visai என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மாற்றங்களைச் செய்து முடித்தவுடன் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சிட முடியும்.
இனி உங்கள் ஆண்ட்ராய்ட் போனில்,
தமிழில் மின்னஞ்சல் தட்டச்சிடலாம்.
தமிழில் கருத்திடலாம்..
தமிழில் வலைப்பூவிற்கான பதிவுகள் எழுதலாம்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலம் தமிழை எங்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஆண்ட்ராய்ட் போனில் "ENG" எனும் மொழிமாற்றி பட்டனை அழுத்துவதன் மூலம் தமிழுக்கு மாறலாம்.