Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

பாதங்களை சரியாக பராமரிக்க சில குறிப்புகள்


* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

* பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும்
ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும்.

* பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும்.

* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும்.

அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும்.



* குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.

Followers

Comments Please...