நிறைய ஸ்மார்ட்போன்களில் தமிழ் எழுத்துக்கள் எடுப்பதில்லை என்பது வருத்தமான செய்திதான். இதோ நீங்கள் ஆன்றாயிடு (Android) போன் வைத்திருந்து அதில் தமிழ் எழுத்துக்கள் எடுக்கவில்லை என்றால் ஒரு வழி இங்கே உள்ளது.
ஆண்ட்ராயிடு போன்களில் உள்ள ஒரு சிறப்பு ரூடிங் (Rooting) தான். குறிப்பாக ஒரு மொபைல் போனை வடிவமைக்கும் போதே சில option -களை நமது
கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிவிடுவார்கள். (உதாரணத்திற்கு, சில file-களை நம்மால் delete செய்ய முடியாது.) அனால் ஆன்றாயிடு போன்களில் நம்மால் அந்த விலக்கப்பட்ட option-களை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வரமுடியும். அதன் மூலம் நமது போனை நமக்கு ஏற்ற மாதிரி நம்மால் மாற்றி கொள்ள முடியும். இந்த வசிதியைதான் ரூடிங் (Rooting ) என்பர். ரூடிங் மூலம் நமது ஆன்றாயிடு போனில் தமிழ் எழுத்துகளை தோன்ற வைத்து விடலாம்.
எப்படி ஆன்றாயிடு போனை ரூடிங் செய்வது?
ரூடிங் செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் எளிமையான வழி இதோ.
முதலில், z4root என்ற ஆன்றாயிடு application-ஐ நீங்கள் உங்கள் ஆன்றாயிடு போனில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.
z4root ஆன்றாயிடு மார்க்கெட்டில் அல்லது கூகிள் ப்ளேயில் கிடைக்கவில்லை என்றால் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். . (இங்கு கிளிக் செய்யவும்)
ப்ளுடூத் அல்லது டேட்டா கேபிள் மூலம் உங்களது மொபைல் போனிற்கு z4root application-ஐ எடுத்து, அதன்பின் இன்ஸ்டால் செய்யவும்.
z4root-ஐ இன்ஸ்டால் செய்த பிறகு, ஓபன் செய்து "root" என்ற பட்டனை அழுத்திவிடவும்.
உங்களது போன் ரீஸ்டார்ட் ஆகும். இப்பொழுது உங்களது அன்றாயிடு போனில் ரூடிங் வசதி உள்ளது.
மிகமுக்கியம்: உங்களது ஆன்றாயிடு போனின் கேரன்ட்டி காலம் முடிந்திருந்தால் மட்டுமே ரூடிங் செய்யவேண்டும். இல்லாவிடில், ரூடிங் செய்த ஆன்றாயிடு போன்கள் வாரண்டி கோர முடியாது. ரூடிங் மூலம் உங்களது போனில் எந்த மாற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம். எனவே, ரூடிங் வசதியை கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
உதாரணதிற்கு, ரூடிங் செய்யாத போன்களில் "Messaging" என்ற application-ஐ delete செய்யமுடியாது. ஆனால் ரூடிங் செய்த போன்களில் delete செய்யமுடியும். தவறுதலாக ரூடிங் மூலம் delete செய்துவிட்டீர்கள் என்றால் பின் எவ்வாறு sms அனுப்பவும் பெறவும் முடியும்? எனவே ரூடிங் வசதியை தவறாக பயன்படுத்த கூடாது.
தமிழ் எழுத்துகளை பெற்றபின், ரூடிங் வசதியை திரும்பவும் நிறுத்தி விடலாம். z4root application-இல் உள்ள unroot என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் ஆன்றாயிடு போன் ரூடிங் வசதியை இழந்து விடும். ரூடிங் வசதிகளில் அனுபவம் இல்லாதிருந்தால் இது நல்லது. வேலை முடிந்தவுடன் unroot செய்துவிடுவது நல்லது.
இனி தமிழ் எழுத்துகளை எப்படி உங்கள் ஆன்றாயிடு போனில் எடுக்க வைக்கலாம் என்பதுபற்றி பார்போம்
முதலில், ஆன்றாயிடு மார்க்கெட் சென்று, "Superuser", "Android terminal emulator", "busybox" என்ற application-களை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துவிடவும். ஒருமுறை, அந்த application-களை திறந்துவிட்டு க்ளோஸ் செய்யவும்.
பின், latha.ttf என்ற font-ஐ உங்கள் கணினியில் இருந்து copy செய்து ஆன்றாயிடு மொபைல் போனில் டேட்டா கேபிள் கொண்டு பெற்றுகொள்ளவும்.
latha.ttf font பெற வழிகள்
விண்டோஸ் xp : Settings > Control Panel > Fonts
விண்டோஸ் 7 : Control Panel > Appearance and Personalization > Fonts
உங்கள் மெமரி கார்டில் "latha" என்ற folder (கோப்பு) உருவாக்கிவிடவும். பின், latha.ttf font-ஐ அந்த folder-இல் வைத்துவிடவும்.
வைத்தபின், latha என்ற பெயருக்கு பதிலாக DroidSansFallback என rename செய்யவும்.
இப்போது android terminal emulator-ஐ ஓபன் செய்து, கீழுள்ள வரிகளை அப்படியே டைப் செய்யவும்.
su
mount -o rw,remount -t yaffs2 /dev/block/mtdblock3 /system
chmod 4755 /system/fonts/DroidSansFallback.ttf
dd if=/sdcard/latha/DroidSansFallback.ttf of=/system/fonts/DroidSansFallback.ttf
reboot
இப்போது, உங்கள் போன் ரீஸ்டார்ட் ஆகும். இனி தமிழ் எழுத்துகள் தோன்றும். கட்டங்கள் தெரியாது.