அதிகம் திருட்டு போகும் பொருள்களில் இன்று முதலிடம் பிடித்திருப்பது பைக் தான். பைக் திருட்டை முற்றிலும் ஒழிக்க நினைத்தோம். அதன் விளைவாய் பிறந்ததே இந்த ‘பைக்
பாஸ்வேர்டு’தொழில்நுட்பம் .
ஏ.டி.எம்.மில் நாம் பணம் எடுக்கும் முன்னர் நமது பின் நம்பரைக் கொடுத்தால் மட்டுமே பணம் வெளிவரும். அதே தொழில்நுட்பத்துடன் பின்நம்பரைக் கொடுத்த பின்னர் பைக்கின் சாவியை ஆன் செய்தால் மட்டுமே பைக் இயங்கத் தொடங்கும்.
தவறுதலான பின்நம்பரைக் கொடுத்தால் பைக் எச்சரிக்கை ஒலி எழுப்பி காட்டிக்கொடுத்துவிடும். இந்தத் தொழில்நுட்பத்தை முழுவதுமாக உருவாக்க 1,000 ரூபாய் மட்டுமே செலவு ஆனது.
இதோடு நின்று விடாமல், பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வின் அடிப்படையில் மேலும் பல தொழில் நுட்பங்களையும் இதனுடன் இணைத்துள்ளோம்.
##இந்த இளம் விஞ்ஞானிகளை நமது அரசுகள் ஊக்கப்படுத்தவேணடுமே.. பலரது கண்டுபிடிப்புகள் இங்கே அலட்சியப்படுத்துப்பட்டு விடுகின்றது என்பது தான் வேதனை##