வகைகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு தேவையான உணவு வகைகள்:
1 : காய்கறிவகைகள்: உங்கள் உடலின் உயிரணுக்களை ஆக்சிடேர்ரிவ் அழுத்தம் (oxidative stress) பாதிக்கும். இது முதுமையை தூண்டும். இதைக் குறைக்க ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) உள்ள காய்கறிவகைகளை உண்ணுங்கள். பலவகையான பலவகை நிற காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முக்கியமாக, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.
2 : பழங்கள்: உங்கள் உணவின் பழங்கள் மிக முக்கியம். ஞாபக மறதியை தவிர்க்க பழங்கள் சாப்பிடுதல் அவசியம். பழங்களில் ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) நிறைய உண்டு. இளமையைத் தக்கவைக்க பழங்கள் மிக முக்கியம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. திராட்சையும் நல்ல பழமாகும். உள்ளூரில் கிடைக்கக் கூடிய பழங்களில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
3 : சோயா: ஜப்பானில் செய்த ஆராய்ச்சியில் பெண்களுக்கு சோயா உண்பதால் பல நன்மைகள் உள்ளன என்று கண்டு பிடித்துள்ளனர். புரதம் நிறைய உள்ள சோயா இளமையாக இருப்பதற்கு உதவும். There is no denying that soy has many health benefits, which are coming form the quality of the soy proteins and from health promoting phytochemicals, such as isoflavones, phytates, saponins and polyphenols. சோயா அதிகம் உண்ணும் நாடுகளில் இருதய நோய்கள் வருவது குறைய என அவதானிக்கப்பட்டுள்ளது.
4 : மீன் வகைகள்: omega-3 fatty acids உள்ள மீன்வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதால் மூளை விருத்தியடையும். வயது போவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். இருதய நோய், புற்று நோய், பாரிச வாதம் ஆகியவை வராமல் omega-3 fatty acids தடுக்கும்.
6 : மசாலாப் பொருள்கள் (Spices) : இஞ்சியும் மஞ்சளும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கின்றன. உடலில் கிருமிகளைக் கொல்கின்றன.
7 : கறுப்புச் சாக்லெட்: இளமையாக இருப்பதற்கு கறுப்புச் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள polyphenols with high antioxidant activity ஆரோக்கியத்தைத் தருவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். அண்மைக் கால ஆய்வுகளின் படி கறுப்புச் சாக்லெட்டில் உள்ள flavonoids இருதயத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இது இருதய நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.