இவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம்
'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.
உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.
பொருளடக்கம்
[மறை]
- 1 சிறப்புகள்
- 2 இறைத்தூது கிடைக்கும் முன்
- 3 இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.
- 4 மதீனாவில் குடியேறல்.
- 5 மக்கா வெற்றி
- 6 அறிஞர்களின் பார்வையில்
- 7 நபித்தோழர்கள்
- 8 நூல்கள்
- 9 இவற்றையும் பார்க்க
- 10 ஆதாரங்கள்
சிறப்புகள்
இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.
“ முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன் ”
என்று கூறியதாகவும் அறிய முடிகிறது.
மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவன் அபுஸுப்யான் ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின் (Heraclius) அவைக்கு சென்ற போது
“ முகம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை ”
என்று கூறியதாகவும், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்
“ மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்? ”
என்று அவரை கேட்டதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இன்னும் முஸ்லிம்களின் திருக்குர்ஆன் இவரை 'முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல உலக மனிதர்கள் அனைவருக்குமாக அனுப்பப்பட்டவர்' என்பதை இப்படி கூறுகிறது.
“ (நபியே! ) உம்மை (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத் தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராவும் (பாவங்கள் குறித்து ) அச்சுறுத்தி எச்சரிக்கை செய்பவராகவும் (,அனுப்பியுள்ளோம்.) (34:28) ”
(முஹம்மதே!)உம்மை நற்செய்தி கூறுபவராகவும் எச்செரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.(25:56)
நபியே(முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்செரிக்கை செய்பவராகவும் அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும் ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம். (33:45,33:46)
இறைத்தூது கிடைக்கும் முன்
தந்தையை காணும் பாக்கியம் பெறாத தம் அன்பு பேரனுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் "முஹம்மது"(புகழ்பெற்றவர்) என பெயர்ச்சூட்டினார். அரபுகளின் அறியாமைக் காலம் http://www.youtube.com/watch?v=lq1EIcqets4
இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.
தனது 40 வது வயதிலேயே இறை அழைப்பு பணி தமக்கு கிடைக்கப்பெற்றதும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை 'ஸபா 'மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்:
“ இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை
நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மக்கள்: ‘ஆம், நம்புவோம்’
முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’
முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’
”
- (ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)
"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன்.அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"
நபிகள் நாயகம் பட்ட துன்பங்கள் http://www.youtube.com/watch?v=bL9XUwi-XZc இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு to Watch as Playlist Click here http://www.youtube.com/view_play_list?p=D1A7135D34E72FDE
இதுதான் முஹம்மத் அவர்களது நிறுவலாக இருந்திருக்க வேண்டும்.
மதீனாவில் குடியேறல்.
முஹம்மது நபி (ஸல்) நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவானின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர் (ரலி)அவர்களுடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார்கள்.
[தொகு]மக்கா வெற்றி
அறிஞர்களின் பார்வையில்
“ உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே. ”
M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33)
“ உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன. ”
“ மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. ”
“ சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ ”
“ அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.
நபித்தோழர்கள்
[தொகு]நூல்கள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]ஆதாரங்கள்
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது.
இக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தை பார்க்கவும்.
கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்))