Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள்

துன்பம் கண்டு மலைக்காதீர்:மனிதனாகப் பிறந்து விட்ட நம்மை மலைபோல் பல துன்பங்கள் சூழ்கின்றன. இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக்
கூடாது. தேனீக்களின் வாழ்க்கையை பாருங்கள். அவற்றின் வாழ்க்கையைப்
பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக்
கூடுகளைக் கட்டி விடுகின்றன. இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப்பாருங்கள். தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி
மலைப்பதில்லையோ, அவ்வாறே மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.

மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன. இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன? இது எப்படி சாத்தியமாகிறது? மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?

நுண்ணிய ஆராய்ச்சி செய்தால் தான் இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே வழியில் மீண்டும் திரும்புகின்றன.

மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில் இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக் கொள்வோம்

Followers

Comments Please...