Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

இளநரை நிரந்தர தீர்வு


தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க..

தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க

தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளர

◾கறிவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.


◾காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.

◾மரிகொழுண்டு இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்.

தலைமுடி உதிர்வதை தடுக்க

◾வெந்தையம் மற்றும் குன்றிமணியை போடி செய்து தேங்காய் எண்ணையில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வர, தலைமுடி உதிர்வது நிற்கும்

◾ நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் பொடியை தண்ணிரில் கலந்து இரவில் காய்ச்சி, காலையில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குளித்து வர, தலைமுடி உதிர்வது அறவே நிற்கும்.

வழுக்கை தலையில் முடி வளர

◾மருதாணி பூவை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, வெய்யிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.

◾நேர்வாளங் கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு அரைத்து தடவி வர சொட்டை தலையில் முடி முளைக்கும்

◾கீழாநெல்லி இலை மற்றும் வேரை பொடியாக்கி, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், வழுக்கை தலையில் முடி வளரும்.

பேன்,பொடுகு தொல்லை நீங்க மருந்து

◾தினமும் தூங்கும்பொழுது செம்பருத்தி இலையை முடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் பேன், பொடுகு போகும்

◾மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வர பேன், பொடுகு தொல்லை போகும்.

◾துளசி மற்றும் வேப்ப இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பேன், பொடுகு தொல்லை போகும்.

◾சீதாப்பழ விதையை காயவைத்து, பொடியாக்கி, சீயக்காயோடு கலந்து தேய்த்து குளித்து வர, பேன் போகும்.

◾வேப்பிலை தண்ணிரில் இரவில் ஊறவைத்து, காலையில் தலைக்கு குளிக்கும்போது உபயோகபடுத்தி வந்தால், பேன் போகும்.

நரைமுடி கருப்பாக

◾கறிவேப்பிலை நன்றாக அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் இளநரை போயி போய்விடும்

◾ கசகசா 100 கிராம், அதி மதுரம் 100 கிராம் கலந்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, குளிக்கும் முன் பசும்பாலில் பொடியை கலந்து தலைக்கு தடவி, அரை மணி நேரம் கழித்து தொடர்ந்து குளித்து வந்தால், நரை முடி கறுப்பாகும்

◾ தாமரைப்பூ கஷாயம் தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாகும்.

◾நெல்லிக்கையை காயவைத்து, பவுடர் ஆக்கி, எண்ணெயுடன் கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை போகும்.

◾முளைக்கீரை ஒரு நல்ல நரைமுடி கருப்பாக உதவும் கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்

◾ செம்பருத்தி பூ, ஆலமரத்தின் கொழுந்து மற்றும் வேர் ஆகியவற்றை போடி செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர, நரைமுடி நன்றாக கருப்பாக வளரும்.

Followers

Comments Please...